எல்லையை மீறும் இராஜதந்திரிகள்
– ஜனாதியதி சீற்றம்
சில
வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள்
என்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இன்று
காலை ஜனாதிபதி
செயலத்தில் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின்
போதே அவர்
இதனை தெரிவித்துள்ளார்.
“சில
வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது எல்லையை மீறுகிறார்கள்.
எதற்காக பாதுகாப்பு
அமைச்சின் கீழ்
பொலிஸ் திணைக்களத்தை வைத்திருக்கிறேன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர்களுக்கு
நான் ‘சரியான
முறையில்’ பதிலளித்தேன்.
மூன்று
அமைச்சுக்களுக்கு மேல் நான் வைத்திருப்பதற்கு
அனுமதியில்லை. இருந்தாலும், எத்தனை நிறுவனங்களையும் வைத்திருக்க
முடியும்.
வர்த்தமானி
அறிவிப்பின் மூலமாக எந்தவொரு அரச நிறுவனத்தையும் நான்
எனது கட்டுப்பாட்டில்
கொண்டு வர
முடியும்.
பொலிஸ்
திணைக்களத்துக்கு மேலதிகமாக, அரசாங்க அச்சகத் திணைக்களத்தையும்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளேன்.
பொலிஸ்
திணைக்களத்தின் உள் கதை சோகமானது. அதனை
ஊடகங்கள் விசாரியுங்கள்”
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment