ஜனாதிபதி தேர்தலுக்கு முன்
பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு
– ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்த
ஆண்டு ஜனாதிபதி
தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்
வாய்ப்புகள் உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
செயலகத்தில் இன்று காலை ஊடகங்களின் ஆசிரியர்களைச்
சந்தித்த போதே
அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
பலவீனமான
நாடாளுமன்றம் ஒன்றில் உறுதியான முடிவுகளை எடுப்பது
கடினமானது, என்றும், அவர் கூறியுள்ளார்.
இந்த
ஆண்டு நவம்பர்-
டிசம்பர் மாதங்களுக்கிடையில்
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள
நிலையில், அதற்கு
முன்னதாக நாடாளுமன்றத்தைக்
கலைத்து தேர்தலை
நடத்தும் அதிகாரம்
ஜனாதிபதியிடம் இல்லை.
இந்த
நிலையில், ஜனாதிபதியின்
இந்தக் கருத்தினால்,
தற்போதைய அரசாங்கத்தைக்
கவிழ்த்து, மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தை
ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா
என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
* மரணதண்டனை
வழங்கும் திகதி
தீர்மானிக்கப்பட்டு விட்டது.
* அர்ஜுன
மகேந்திரனை கைது செய்ய இன்ரபோல் பொலிஸாரிடம்
கேட்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் பிரதமரிடமும்
இதுபற்றி பேசினேன்.
* ஜனாதிபதி
கொலைச்சதி விவகார
விசாரணை பூர்த்தி...
சி ஐ
டி அடுத்த
வாரம் இறுதி
அறிக்கையை சட்ட
மா அதிபரிடம்
கையளிக்கும்..
* நாட்டின்
பொருளாதார நிலையை
மேம்படுத்தும் திட்டங்களை யாரவது முன்வைத்தால் வரவேற்பேன்..
ஊடக
பிரதானிகள் முன்னிலையில் ஜனாதிபதி இது குறித்தும் தெரிவித்தார்..
இன்றைய
சந்திப்பில் ஜனாதிபதியுடன், கலாநிதி சுரேன் ராகவனும்
கலந்து கொண்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment