கொழும்பில் “லீடர் ரிஷாத் பதியுதீன்”
வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி
தெஹிவளை இத்திகாத்
உலமா விளையாட்டுக் கழகம்
கிண்ணத்தை
தனதாக்கிக் கொன்டது.
கொழும்பு,
தெஹிவளை இத்திகாத் உலமா விளையாட்டுக் கழகத்தின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு உலமாக்களுக்கு
இடையில் நடாத்தப்பட்ட “லீடர் ரிஷாத் பதியுதீன்” வெற்றிக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தெஹிவளை இத்திகாத் உலமா விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தை தனதாக்கிக் கொன்டது.
“லீடர்
ரிஷாத் பதியுதீன்” வெற்றிக் கிண்ண
கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று 2 ஆம் திகதி தெகிவளை ஜெயசிங்க விளையாட்டு மைதானத்தில்
நடைபெற்றது.
இறுதிப்
போட்டியில் தெஹிவளை இத்திகாத் உலமா விளையாட்டுக் கழக அணியும் கொழும்பு உலமா அணியும்
மோதிக்கொண்டன.
இச்சுற்றுப்
போட்டியில் இரண்டாமிடத்தை கொழும்பு உலமா அணியும் மூன்றாம் இடத்தை பானந்துறை உலமா அணியினரும்
நான்காவது இடத்தினை அக்குறணை உலமா அணியினரும் பெற்று கொன்டனர்.
இந்நிகழ்வில்
இளைஞர் வலுவூட்டல்
கூட்டறவு அமைப்பின்
தலைவரும்,டெலி லங்கா ஹோல்டிங்க் நிறுவனத்தின் தலைவருமான
அல்
ஹாஜ் ரியாஸ்
அவர்கள் பிரதம
அதிதியாகவும் மேமன் சங்கத் தலைவர் அனஸ், தெஹிவளை பள்ளிவாசல்
சம்மேளனத் தலைவர் உட்பட உலமாக்கள் ,
பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்
0 comments:
Post a Comment