சுற்றாடல் மாநாட்டில்
கலந்துகொள்ள
ஜனாதிபதி கென்யா விஜயம்
======================================
கென்யாவின்
நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக
கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு
பயணமானார்.
கென்ய
ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த சுற்றாடல்
மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு
மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளில் மார்ச் 11ஆம்
திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு மார்ச் 15ஆம் திகதி
வரை நைரோபி நகரில் நடைபெறவுள்ளது.
அதன்
உயர்மட்ட பிரதான கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, நாளை நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன, மாநாட்டில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
பிரான்ஸ்
ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில்
கலந்துகொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment