மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட
எமது கட்சியில் இணைய வேண்டும்!
பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ எடுக்கும் இறுதி தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் தொடர்பில் மக்களின் விருப்பமும் இருக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற வேண்டும். எனினும் எமது கட்சியில் அங்கத்துவத்தை பெறுவது தற்போது இலகுவான காரியமல்ல.

அதற்கு இரண்டு பேரின் அனுமதி தேவை எனவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு சிரித்தவாறு பதிலளித்த பசில்,

யாராக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்றாக வேண்டும். அதற்கு இரண்டு பேரின் அனுமதி தேவை. அப்படி இருவர் இருந்தால் பார்க்கலாம்..

* நாங்கள் கூட்டணி அமைக்க யாரிடமும் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை...

* ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பில்லை. அது தான் வரலாறு.

* ஜனாதிபதி வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும்.கோட்டாபய முன்வந்து தனது விருப்பை சொன்னது போல போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* மக்கள் விரும்பும் வேட்பாளர் தான் எங்கள் தேர்வும் ..

* கூட்டணி தொடர்பில் நாங்கள் 14 ஆம் திகதி நடக்கும் சந்திப்பில் திறந்த மனதுடன் பேசுவோம்.கால எல்லை - நிபந்தனை இடமாட்டோம்.

* ஜனாதிபதி தேர்தலில் வடக்கும் கிழக்கு மாகாணங்கள் முக்கியத்துவமானவை.. அதை ஏற்கிறேன்..

* எமது நாடு இறைமையுள்ள நாடு. அந்த நாடுகளின் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்.அதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் நாங்கள் உலக நாடுகளுடனும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதுவே யதார்த்தம். என குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top