ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு
- தோற்கடிக்கப்படுமா?
அரசாங்கத்தின்
2019ஆம் ஆண்டுக்கான
வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான
குழுநிலை விவாதங்கள்
நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.
இன்று
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள்
உள்ளிட்ட பல்வேறு
துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை
விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின்
செலவுகளாக 13.5 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 8.2 பில்லியன் ரூபா அபிவிருத்தி செயற்பாடுகளுக்கானதாகும்.
அதேவேளை,
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை குழு நிலை
விவாதங்களின் போது, தோற்கடிக்கப் போவதாக ஐதேகவின் பின்வரிசை
உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும்,
வரவுசெலவுத் தி்ட்டத்தை எதிர்த்தாலும், ஜனாதிபதிக்கான நிதி
ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்க்கட்சித்
தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment