.நா தலையீட்டை எதிர்க்க

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை
ஜெனிவாவுக்கு அனுப்புகிறார் ஜனாதிபதி




வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் அரசாங்கத்தின் தரப்பில் .நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஊடகங்களின் ஆசிரியர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க ஆகியோரைக் கொண்ட குழுவே ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளது.

.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அரசாங்கத்தின் சார்பில் உயர்மட்டக் குழு பங்கேற்பதில்லை என்றும், ஜெனிவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதியே அதனைக் கையாளுவார் என்றும் வெளிவிவகார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடக்கு மாகாண ஆளுநரையும் ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்.

இலங்கை விவகாரத்தில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவற்காகவே, இவர்கள்  ஜெனிவாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பழைய வடுக்களை கிளறாமல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்குமாறு இவர்கள் ஜெனிவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

* மரணதண்டனை வழங்கும் திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டது.
* அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய இன்ரபோல் பொலிஸாரிடம் கேட்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்.
* ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

* ஜனாதிபதி கொலைச்சதி விவகார விசாரணை பூர்த்தி... சி டி அடுத்த வாரம் இறுதி அறிக்கையை சட்ட மா அதிபரிடம் கையளிக்கும்..

* நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டங்களை யாரவது முன்வைத்தால் வரவேற்பேன்..

ஊடக பிரதானிகள் முன்னிலையில் ஜனாதிபதி இது குறித்தும்  தெரிவித்தார்..
இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன், கலாநிதி சுரேன் ராகவனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top