ஆப்பிழுத்த குரங்குகள்.
கெட்டிக்காறனின்
பொய்யும் புரட்டும்
தக்கு மூக்கு
திக்கு தாளம்
என்ற பாட்டு
ஞாபகம் வருகுது,
கல்முனையில
தமிழ் என்றோ,
வடக்கு என்றோ
ஒரு பிரதேச
செயலகம் 1992ம் ஆண்டின் 58ம் இலக்க
பாராளுமன்ற சட்டத்தின் கீழ்
பொது நிர்வாக
அமைச்சரால் கெசெட் செய்ய படாவில்லை. அப்படி
என்றால் அது
ஒரு பிரதேச
செயலகமல்ல.
பயங்கரவாத.
கலவர காலத்தில்
ஆயுதமுனையில் அப்பாவி தமிழர்களை உசுப்பேத்தி உருவாக்கி.
எந்த சட்ட
அங்கிகாரமுமில்லாது ஒரு கூரையின்
கீழ் இயங்க
வேண்டிய உப
பிரதேச செயலாளரை
வேறு கூரையின்
கீழ் சட்டப்படியான
எந்த கடமைப்பட்டியலுமில்லாமல்
தான் தோன்றித்தனமாக
கடமைகளை உருவாக்கி
ஆளணி சேர்த்து
உபபிரதேச செயலாளராக
கடமை யேற்றவர்கள்
தங்களை பிரதேச
செயலாளர் என
பொய் பதவி
நாமம் சூட்டி
தமிழர்களை ஏமாற்றிய
ஒன்றாகும்.
இதன்
உண்மைத்தன்மையை அறியாது, இது செயற்படுத்தக்கூடிய ஒரு காரியமா என ஆராய்ந்து
மக்களை வழி
நடாத்த வேண்டிய
சம்பந்தன் ஐயா
அவர்கள் கடந்த
மாநகர சபை
தேர்ரலில் தமிழர்களது
வாக்குகளை அறுவடை
செய்வாதற்காக சில்லறை அரசியல்வாதிகளது பொய்யை உள்வாங்கி
கல்முனை தமிழ்
பிரதேச செயலகத்தை
சபை அமைத்து
200 நாட்கழுக்குள் தரமுயர்த்தி தருவதாக
தேர்தல் வாக்குறுதி
வழங்கினார். இந்த பொய்யை நம்பிய அப்பாவிகள்
வாக்குகளை அள்ளிப்போட்டார்கள்.
பதவிகளை அனுபவிப்பவர்கள்
இதை தரமுயர்த்த
முஸ்லிம்கள் விடுவதாக இல்லை என தங்களது
பொய்யை. இயலாமையை
மறைக்க இனவாதத்தை
கக்குகிறார்கள்.
அரசியல்வாதிகள்
ஒளிந்து கொள்வார்கள்.
இந்த திருகுதாளத்தை
செய்த, அதற்கு
துணைபோன அதிகாரிகள்
மாட்டிக் கொள்வார்கள்,
ஏமாந்தது தமிழர்கள்.
பழிபோடுவது முஸ்லிம்களில். நாம் இன மத பேதம் மறந்து
தூய கல்முனையானாக
இருந்து கல்முனையை
காப்போம்.
அதேபோலதான்
சாய்ந்த மருது
பிரதேச சபை
விவகாரமும்.
தேர்தல்
கோசமாக முன்வைக்கப்பட்டு
அப்பாவி மக்களை
உசுப்பேத்தி. பிரதமரை வைத்து பொய் சொல்ல வைத்து
மக்களை ஏமாற்றி,
பள்ளியில்வைத்து வாக்களித்து அதற்கு பரிசாக செருப்பு,
தூப்பாங்கட்டு உயர்த்தப்பட்டு, ஆத்திரத்தை
அன்பால் வெல்லாது
இராணுவம் புடைசூழ
தனக்கு தலைமைத்துவம்
பிரகடனம் செய்த
சாய்ந்தமருதை யுத்த பூமியாகக் கருதி மமதை
பிடித்த கூட்டம்
நடாத்தி மலையை
கெல்லி எலியை
பிடித்த அரசியல்
செய்தார்கள். அளித்த பொய் வாக்குறுதியை செய்ய முடியாது
கல்லில் பேண்ட
பூனைபோல நின்று
தவறை மறைத்து
கதிரையை காப்பாற்ற
பிரதேச வாதத்தைப்
போதிக்கிறார்கள்.
பொதுவாக
தமிழ் மக்களும்
, முஸ்லிம் மக்களும் இனவாத பிரதேசவாத
அரசியல் வாதிகளால்
ஏமாற்றப்படுகிறார்கள்.
இருசமுகங்களதும்
சகல ஊர்களதும்
சிவில் சமுக
தூய அமைப்புகள்
ஒன்று சேர்ந்து செயற்படுவதே சாலச் சிறந்தது. இந்த
துயரத்தையும், துன்பத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கும் கொடுத்துவிடாதிருக்க
பரிகாரம்காண்போமா?
இருசமுக
போலி அரசியல்வாதிகள்
இந்த விடயங்கஊளில்
ஆப்பிழுத்த குரங்காகிவிட்டார்கள்.
நரியின்
சாயம் வெளுத்துவிடடது.
மக்கள்
இவர்களை இனம்கண்டு
விட்டார்கள்.
உண்மை
வெல்லும்.....
அசத்தியம்
அழியும்.....
இது
இறை வாக்கு.
கல்முனை,
ஹாஜி
நஸீர்,
0 comments:
Post a Comment