ஜனாதிபதி சார்பில்
ஜெனிவாவிற்கு செல்லும்
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட குழுவினர்
தமது
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு
சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் பேரவையில்
வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை
ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
இன்று
காலை இடம்பெற்ற
ஊடக நிறுவனங்களின்
பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
கலாநிதி சரத்
அமுனுகம, நாடாளுமன்ற
உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண
ஆளுநர் கலாநிதி
சுரேன் ராகவன்
ஆகியோர் இந்தப்
பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.
மேலும்
இதன்போது, இந்த
வருடம் முதலில்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும்,
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்கும்போது முதலில் பொதுத்தேர்தல்
நடத்தப்படலாம் எனவும் இது தேர்தல் வருடம்
எனவும் ஜனாதிபதி
கூறியுள்ளார்.
இதேவேளை,
போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக உலகின் அதியுயர்
தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முதலீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment