பிரதமர் இந்தியாவுக்குப் பயணம்
– திருப்பதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமர்
ரணில். விக்ரமசிங்க
இன்று பிற்பகல்
இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.
திருப்பதி
ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை செய்வதற்காகவே அவர்
இரண்டு நாட்கள்
இந்தியப் பயணத்தை
மேற்கொள்ளவுள்ளார்.
இன்று
பிற்பகல் 3 மணியளவில் சென்னைக்குச் செல்லும்
ரணில் விக்ரமசிங்க,
அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம், மாலை
4.30 மணியளவில் திருப்பதியைச் சென்றடையவுள்ளார்.
அங்கிருந்து,
தரைவழியாக திருமலைக்குச்
செல்லும் அவர்,
சிறி பத்மாவதி
விடுதியில் இரவு தங்கியிருப்பார்.
நாளை
அதிகாலை ஏழுமலையான்
ஆலயத்தில் வழிபாடுகளை
முடித்துக் கொண்டு, பிற்பகல் 1.15 மணியளவில் திருப்பதி
விமான நிலையம்
வழியாக சென்னை
திரும்பி, அங்கிருந்து
கொழும்புக்கு வந்தடைவார்.
பிரதமரின்
வருகையை முன்னிட்டு
திருமலையில் சிறப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மார்ச்
2-ம்
திகதி
திருப்பதியில்
சாமி
தரிசனம்
செய்கிறார்.
அவரது வருகையையொட்டி பாதுகாப்பு
ஏற்பாடுகள்
குறித்து
திருப்பதி
மாவட்ட
ஆட்சியர்
தேவஸ்தான
அதிகாரிகளுடன்
கலந்தாலோசித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
.
0 comments:
Post a Comment