வாகன விலை அதிகரிப்பால்
இறக்குமதித் துறை பாதிக்கும்
வாகன இறக்குமதியாளர் சம்மேளனம்



வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக வாகனங்களின் விலைகள் அதிகரித்திருப்பதால் வாகன இறக்குமதி மற்றும் வாகன விற்பனைத் துறை சவாலாக மாறியிருப்பதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

பெற்றோல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் பிரிவில் சுங்க வரி அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் விலை பெருமளவு அதிகரிக்கப்பட்டிருப்பதால் வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் மக்களின் நாட்டம் குறைந்திருப்பதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்ஜன் பீரிஸ்,

 அரசாங்கத்தின் புதிய வரி அறவீடு தொடர்பில் நாம் அதிகளவு கவலை கொண்டுள்ளோம். இதனால் வாகன விற்பனை விலை அதிகரித்துள்ளதுடன், பொது மக்கள் அவற்றை கொள்வனவு செய்வதில் காண்பிக்கும் நாட்டம் குறைவடையும், இதனால் துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

3.5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான விலையைக் கொண்ட வாகனங்களுக்கு அரசாங்கம் சொகுசு வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இறக்குமதியின் போது இந்த வரி அறிவிடப்படவுள்ளது. இது தொடர்ந்தும் இந்த அமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

பீரிஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், “சொகுசு வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையின் பின்புலத்தை நாம் அறிந்துள்ள போதிலும், துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிமுறைகளை அறிமுகம் செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுக்கிறோம்.” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

2000 கிலோ கிராம்களுக்கு குறைந்த கொள்ளளவு திறன் கொண்ட படிட்ரக் வகைகள் மீதான உற்பத்தி வரி ரூ. 100,000 இனால் குறைந்துள்ள போதிலும், தற்போதைய விலைகள் மற்றும் நாணயமாற்று விகிதங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, புதிய விலையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என தாம் கருதுவதாக சம்மேளனம் குறிப்பிட்டது. 

தற்போதைய வரவுசெலவுத்திட்ட அளவு கோல்களின் பிரகாரம், Loan -- to - Value (LTV)  விகிதத்தை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் சம்மேளனம் கோரிக்கைவிடுத்துள்ளது. தற்போது இந்த பெறுமதி 50% ஆக அமைந்துள்ள நிலையில், வாகன உற்பத்தியாளர்களை கவர்வதற்கு இது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இந்த பெறுமதியை 75% ஆக உயர்த்துவதனூடாக, தற்போது காணப்படும் பொருளாதார சூழலில், பெருமளவு பொது மக்களுக்கு மோட்டார் வாகனமொன்றை கொள்வனவு செய்ய உதவியாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வாகனம்                           விலை அதிகரிப்பு ரூபாவில்

டைஹட்சு மிரா                                    150,000
சுசுகி ஜிம்னி                                          150,000
சுசுகி வெகன் ஆர்                                  250,000
சுசுகி ஸ்பேஷியா                                 250,000
டொயோடா விட்ஸ்                             250,000
சுசுகி ஸ்விஃவ்ட்                                   250,000
ஹொண்டா சிவிக்                               250,000
அவுடி 1                                                250,000
சுசுகி கிரான்ட் விடாரா                          250,000
டொயோடா அக்சியோ ஹைபிரிட்      525,000
ஹொன்டா வெசல்                               525,000
டொயோடா சிஎச்-ஆர்                          540,000
டொயோடா பிரெமியோ                       675,000
டொயோடா அலியன்                            675,000
ஹொன்டா சிஆர்வி                              675,000 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top