தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும்
புலமைப்பரிசில் 2ம் கட்ட அறிமுகமும்..!!
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
சம்மாந்துறை
பிரதேச சபையின்
தவிசாளரும்,அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரும்,
சம்மந்துறைத் தொகுதி அமைப்பாளருமான அல்-ஹாஜ். ஏ.எம்.எம்.
நௌஷாட் அவர்களின்
நெறிப்படுத்தலின் அடிப்படையில் இம்முறை கா.பொ.த உயர் தர
பரீட்சை எழுதிய
மாணவர்களின் நலன் கருதி, வழங்கப்படவிருக்கின்ற புலமைப் பரிசுத் திட்டத்தின் கீழ்
நடைபெறவிருக்கின்ற பயிற்சி நெறிக்கான
(கணனி, ஆங்கிலப்
பயிற்சி நெறி)
அனுமதியும், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும், இன்று
(2014.09.06) காலை 9.30 மணியளவில் சம்மாந்துறை அப்துல்
மஜீட் மண்டபத்தில்
தவிசாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்
நிகழ்வில் ஏ.எல். பதூர்தீன் (அதிபர், ஹாடி
உயர் தொழில்
நுட்பக் கல்லூரி
– அம்பாறை), சம்மாந்துறை பிரதேச
சபையின் உறுப்பினர்கள்,
செயலாளர், மற்றும்
உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள்
கலந்து கொண்டிருந்தனர்.
சம்மாந்துறை
பிரதேச சபையின்
கௌரவ தவிசாளர்
அல்-ஹாஜ்.
ஏ.எம்.எம். நௌஷாட்
அவர்களின் இந்
நெறிப்படுத்தலானது இம் முறை
கா.பொ.த உயர் தர பரீட்சை
எழுதிய மாணவர்களின்
வாழ்வில் ஒளியூட்டும்
ஓர் அங்கமாகவே சம்மாந்துறை
மக்கள் மத்தியில்
பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment