தூதரகத்தை
பாதுகாப்பதற்கு 350 இராணுவ வீரர்களை
அமெரிக்கா
ஈராக்கிற்கு அனுப்பியது
ஈராக்கில்
கடந்த ஜனவரி
மாதம் தொடக்கம்
சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் ஷியா முஸ்லிம் அரச
படையினருக்கு எதிராக தக்குதல் நடத்தி வருகின்றனர்.
போராளிகள் வடக்கு
மற்றும் மேற்கு
பகுதிகளில் உள்ல பல நகரங்களை கைப்பற்றி
உள்ளனர்.
தலைநகர்
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், தனது
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க ஏற்கனவே
820 இராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
சமீபத்தில்
லிபியா திரிபோலியில்
அமெரிக்க தூதரகத்தை
போராளிகள் கைப்பற்றினர்.
அதே போன்ற
நிலைமை ஈராக்கிலும்
ஏற்படக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில்
மேலும் 350 இராணுவ வீரர்களை ஈராக்குக்கு அமெரிக்கா
தற்போது அனுப்பியுள்ளது.
அதிபர்
ஒபாமா உத்தரவின்
பேரில் இவர்கள்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தலைநகர்
பாக்தாத்துக்கு சென்று விட்டனர். அமெரிக்க தூதரகம்
மற்றும் அமெரிக்கர்களுக்கு
பாதுகாப்பு அளிப்பார்கள். ஈராக்கில் முகாமிட்டுள்ள வீரர்களில்
பெரும் பாலானவர்கள்
இராணுவம் மற்றும்
கடற்படையை சேர்ந்தவர்கள்
என பென்டகன்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment