500 விக்கெட்களை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர்
அக்ரம் 48 வயதில் தந்தையாகிறார்!



கிரிக்கெட் உலகில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வேகப்பந்து வீச்சாளார் வாசிம் அக்ரமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகின் தலைசிறந்த வேக பந்து வீச்சாளர்களில் ஒருவர் 500 விக்கெட்களை எடுத்த முதல் வீரர் இப்படிபல்வேறு சாதனைகளை படைத்தவர் இவர் செய்த அத்தனை சாதனைகளும் நீரிழிவு நோயோடு போராடி கட்டுப்படுத்தி செய்துள்ளார் என்பதே மிக பெரிய சாதனையாகும்.
 பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் 1997ல் தன்னுடைய 29 வயதில் நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்து மிகவும் உடைந்து போனார். மிகவும் ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு உயரும் தன்மையை கொண்ட வாசிம் அக்ரம் கூறுவதைக் கேளுங்கள்.
ஆரம்பத்தில் எனக்கு சர்க்கரை நோய் உள்ளது என்றவுடன் மிகவும் உடைந்து போனேன் என் மனைவிதான் தைரியத்தை கொடுத்தார். சில மருத்துவர்கள் கூட என்னை அச்சுறுத்தினர்கிரிக்கெட்டை கைவிடக்கூறினார்கள்
என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள்  சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்தும் இன்றும் ஆரோக்கியமாக வாழும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். முக்கியமாக முன்பிருந்ததைவிட அதிக நேரம் உற்சாகமாக தங்களுடைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். அதற்கு முக்கிய காரணம் அளவான உணவு ஆரோக்கியமான வாழ்வு என்பதை கடைபிடித்து வந்தனர்.
 சில நாள்கள் அவர்களுடன் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டேன். அது ஒன்றும் பெரிய சிரமமான செயல் அல்ல. பாகிஸ்தான் திரும்பிய பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தேன். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல புதிய நல்ல திருப்பங்கள் ஏற்பட்டன. இன்று யாரும் என்னை பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது.
 கலகலப்பான வாழ்க்கை, உணவுக்கட்டுபபாடு, மருத்துவர்களின் ஆலோசனை எல்லாவற்றையும் விட குடும்பத்தாரிடமும், பழகும் பிற நபர்களிடமும் இன்முகத்துடன் பழகி சுற்றுப்புறச்சூழலைக் கலகலப்பாக வைத்துக் கொண்டாலே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். என்கிறார்.

 அவரின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தார். பின்னர் சனிரா என்ற பெண்னை 2013ல் மணந்தார் தற்போது சனிரா கர்ப்பமாக உள்ளார். வாசிம் அக்ரம் 48வயதில் தந்தையாகிறார். நீரிழிவு நோயினால் பாதித்தவர்களுக்கு இவர் ஒருஎடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top