நாட்டில் மல சல கூட வசதியின்றி 87248 குடும்பத்தவர்கள்
தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு.
எமது
நாட்டில் மல
சல கூட
வசதியின்றி 87248 குடும்பத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை
மதிப்பு புள்ளி
விபரத் திணைக்களம்
இறுதியாக வெளியிட்டுள்ள
தனது புள்ளி
விபர அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான குடும்பத்தவர்கள் தமக்கென மல சல கூட வசதியில்லாமல் இருந்து
கொண்டிருக்கிறார்கள் என புள்ளி
விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில்
மொத்தமாக 16868 குடும்பத்தவர்கள் இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட
ரீதியில் தமக்கென
மல சல
கூட வசதியில்லாத
குடும்பத்தவர்கள் எண்ணிக்கை பற்றிய விபரம் வருமாறு,
நாட்டில் மொத்தமாக 5188047 குடும்பத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இறுதிக் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.
இக்குடித்தனங்களில் 1698474 குடும்பங்கள் தமது குடியிருப்புக்குள் தமக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மல சல கூடங்களைப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
113362 குடும்பங்கள் தமது குடியிருப்புக்குள் அமைக்கப்பட்ட மல சல கூடங்களில் வேறு குடித்தனங்களுடன் சேர்ந்து அதனைப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2786284 குடும்பங்கள் தமது குடியிருப்புக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தமக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மல சல கூடங்களை உபயோகிக்கிறார்கள்.
338641 குடும்பங்கள் தமது குடியிருப்புக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மல சல கூடங்களில் வேறு குடித்தனங்களுடன் சேர்ந்து அதனைப் பாவிக்கிறார்கள்.
128839 குடும்பங்கள் தமக்கு தனியாக மல சல கூட வசதியில்லாத போதிலும் வேறு குடியிருப்பாளர்களின் மல சல கூடங்களைப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
35199 குடும்பங்கள் பொது மல சல கூடங்களைப் பாவிக்கின்றார்கள்.
இக்குடும்பங்களைத் தவிர 87248 குடும்பங்கள் மல சல கூடம் பயன்படுத்துவதில்லை எனவும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment