அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட 9 நாடுகளுக்கு அழைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிளை கூண்டோடு அழிக்க கூட்டுக்குழுவாம்
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிளை கூண்டோடு அழிக்க கூட்டுக்குழுவாம்
பெரும்
அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
கூண்டோடு அழிக்க
உலகின் 10 நாடுகள்
ஒன்றிணைந்த கூட்டுக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது. வேஸில்ஸ் நடைபெற்ற நேட்டோ
நாடுகளின் உச்சி
மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஓபாமா உலக
நாடுகள் ஒன்றிணைந்து
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று
விடுத்தார்.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா, கனடா,
டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, போலாந்து, துருக்கி,
பிரான்ஸ், இங்கிலாந்து
உள்பட 9 நாடுகள்
இசைவு தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த கூட்டணி நாடுகள்ஆலோசனை நடத்தும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெரி தெரிவித்துள்ளார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது. ஆனால் வான்வழி தாக்குதல் விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment