சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகள்
மீண்டும் ஆரம்பம்
கல்முனை
மாநகர சபையினால்
சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற
சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகள்
தற்போது துரிதமாக
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது
பீச் பார்க்
நிர்மாணப் பணிகளை
உடனடியாக துரிதப்படுத்துமாறு
கடந்த இரு
வாரங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி
எம்.நிஸாம்
காரியப்பர், வேலைத் திட்ட ஒப்பந்தக்காரர் மற்றும்
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்தே இவ்வேலைத்
திட்டம் துரித
கதியில் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை
மாநகர முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின்
முயற்சியின் பயனாக சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில்
சுமார் 15 மில்லியன்
ரூபா செலவில்
கிழக்கின் முன்
மாதிரியான இந்த “பீச் பார்க்”
அழகான முறையில் அமைக்கப்பட்டு வந்தது.
இதன் முதல் கட்டம்
60 இலட்சம் ரூபா செலவில் முடிவடைந்திருப்பதாகவும் இரண்டாம் கட்ட
வேலைகள் 90 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட
வேண்டியிருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
.
0 comments:
Post a Comment