லிபியாவில் போராட்ட குழுக்கள்
மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுகின்றன

- ஐ.நா அறிக்கை

ஐ.நா சபை வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில்  லிபியாவில் சண்டையிட்டு வரும் போராட்ட குழுக்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளது.
லிபியாவில் செயல்பட்டு வரும் .நா. ஆதரவு மிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் கட்டிடங்கள் மருத்துவமனைகள், மீது தக்குதல்கள் நடத்துகின்றன. கடத்தல் , சித்ரவதை மற்றும் சட்டவிரோதமாக பொது மக்களை கொலை செய்வது போன்ற மனித உரிமை மீறல் செயல்களில் லிபியா போராட்ட குழுக்கள் ஈடுபடுகின்றன. ஆறு வார காலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும்  குடியேற்ற தொழிலாளர்கள் உட்பட 1.5 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.குடிமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,அனைத்து போராட்ட குழுக்களும் தாக்குதல்  நடத்துவதற்கு முன் எச்சரிக்கை கொடுக்க வேண்டும், என கூறப்பட்டு உள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top