அனைவரும் இறங்கி விட்டதாகக் கருதி
பாடசாலை வாகன கதவுகளைமூடி
சென்றதால்
தூங்கிய மாணவி
பலி
அபுதாபியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தை தமது அன்புக்
குழந்தைகளை
பஸ்ஸில் பாடசாலைகளுக்கு அனுப்புவர்கள் ஒரு
முன்னறிவித்தலாக எடுத்து அவதானமாக செயல்பட
சாரதிகளுக்கு
அறிவுறுத்தல் வேண்டும்
அபுதாபியில்
உள்ள தனியார்
பள்ளியில் காலை வழக்கம் போல பாடசாலை
பஸ்ஸில் அனைத்து மாணவ , மாணவியர்களும் வந்தனர். ஆனால்
, 4 வயதுடைய நசிஹா என்ற சிறுமி பஸ்
பாடசாலையை வந்தடைந்தது அறியாமல் அயர்ந்து பாடசாலை
பஸ்ஸில் தூங்கி விட்டாள்.ஆனால் அனைத்து
மாணவ,மாணவியரும்
வாகனத்தில் இறங்கி சென்று விட்டதாக சரியாக
சோதனை செய்யாமல்
பஸ் சாரதியும் உதவியாளரும் வாகனத்தின் ஜன்னல் கதவுகளை
மூடி விட்டு
சென்றனர் பின்னர்
மீண்டும் பாடசாலை
குழந்தைகளை ஏற்றுவதற்கு வாகனத்தை எடுத்த
போது பஸ்ஸிற்குள்ளே
குழந்தை நசிஹா
மயங்கி கிடப்பது
தெரிய வந்தது.
பின்னர்
சிகிச்சைக்காக மருத்துவ மனை கொண்டு சென்றனர்.
சோதனையின் போது
குழந்தை உயிரிழந்து
விட்டது என்று
தெரிய வந்தது.
வாகனம் பாடசாலை
வந்து சேர்ந்ததும் அதை உறுதிபடுத்தும்
விதமாக பஸ்ஸின்
சாரதியும் , உதவியாளரும் பஸ்ஸில் குழந்தைகள்
இல்லை என்பதை
சோதனை செய்வது
வழக்கம்.
இது
போன்ற அரசு வகுத்துள்ள
பாடசாலை குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை சம்பந்தபட்டவர்கள்
சரியாக பின்பற்றி
இருப்பார்களேயானால் குழந்தையின் உயிர்
காப்பாற்றப்பட்டிருக்கும். இது குறித்து
விசாரணை நடைபெற்று
வருகிறது. மாணவ
குழந்தை உயிரிழந்தது
அதிர்ச்சியையும் சோகத்தையும் அங்கு ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment