இங்கிலாந்தில் பல்வேறு வடிவில் உருளை கிழங்கு
விவசாயிகள் அசத்தல்

இங்கிலாந்தில் பல்வேறு வடிவங்களில் உருளைக் கிழங்குகளை விவசாயிகள் உருவாக்கி உள்ளனர். அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்த போது, பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இங்கிலாந்தில் சப்போக் மாநிலத்தில் சவுத்வேல்ட் பகுதியை சேர்ந்தவர் பிராங்க் பாரெட். காய்கறி விவசாயி. இவர் சாதாரணமாக இல்லாமல் சற்று வித்தியாசமாக விதவிதமான வடிவில் காய்கறிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். இதுதொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தற்போது பிராங்க் தனது காய்கறி பண்ணையில் தக்காளி பயிரிட்டு உள்ளார். கலப்பின தக்காளிகளை ஒருபுறமும், சாதாரண தக்காளிகளை மற்றொரு புறமும் பயிரிட்டார். பின்னர், இரண்டையும் ஒருங்கிணைத்து புதுவித தக்காளி இனத்தை உருவாக்கினார்.

அந்த தக்காளியின் உருவம் அடர் சிவப்பு நிறத்தில் மனித சிறுநீரகங்கள் போல் காட்சியளித்தன. இவற்றை நேற்று முன்தினம் மார்க்கெட்டில் பிராங்க் விற்பனைக்கு கொண்டு வந்தார். இந்த தக்காளியை பார்த்த மக்கள் வியப்படைந்தனர். இதேபோல், லைசெஸ்டர்ஷியர் நகரை சேர்ந்த கெவின் ஸ்டோக்சும் அவரது நண்பர்களும் தங்களது பண்ணையில் விதவிதமான உருளைக்கிழங்கு விளைச்சலில் சாதனை படைத்துள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதுவித உருளைக்கிழங்கை உருவாக்கி வருகின்றனர். தற்போது அவர்களது பண்ணையில் பெண்ணின் மார்பகத்தை போல் உருவாக்கி உள்ளனர். இவை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் உருவத்தை கண்டு பெண்கள் சிரித்தனர். ஆண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதாக கெவின் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top