ஈராக்கில் இராணுவம் ஆகாயத் தாக்குதல்
.எஸ்..எஸ். தலைவரின் நண்பன் பலி என அறிவிப்பு

.எஸ்..எஸ். போராட்ட அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் நெருங்கிய நண்பனான அபு ஹாஜிர் அல்-சூரி கொல்லப்பட்டார் என ஈராக்கின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக அபுபக்கர் அல்-பாக்தாதி தலைமையிலான .எஸ்..எஸ். போராட்ட அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கின் பல்வேறு முக்கிய நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
போராளிகள் கைப்பற்றியுள்ள நகர்களை மீட்பதற்காக ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் கடுமையாக போரிட்டு வருகின்றன. இந்த அரசு படைகளுக்கு ஆதரவாக போராளிகளின் முகாம்கள் மீது அமெரிக்காவும் ஆகாயத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் நினிவே மாகாணத்தின் மொசூல் மற்றும் தல் அபார் பகுதிகளுக்கு இடையே ஈராக்கின் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் அபுபக்கர் அல்-பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளியான அபு ஹாஜிர் அல்-சூரி கொல்லப்பட்டார். இந்த தகவலை ஈராக்கின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top