பாகிஸ்தான் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட
அபிநந்தன் உடலில் ரகசிய சிப் வைக்கப்பட்டதா?
மருத்துவமனையில் தொடரும் தீவிர சோதனை!

பாகிஸ்தான் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளதில் முக்கிய இடத்தைப்பிடித்திருந்தது.

தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் மார்ச் மாதம் முதலாம் திகதி அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து இந்தியா வந்த அபிநந்தனுக்கு முழுமையான உடல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகளில் அபிநந்தனுக்கு ஏதேனும் துன்புறுத்தல்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடுக்கப்பட்டதா என்றும் அவர் உடலில் எங்கெங்கெல்லாம் காயங்கள் உள்ளன என்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அபிநந்தனின் உடலில் அவருக்கே தெரியாமல் ரகசிய ஜிபிஎஸ் சிப்புகள் ஏதேனும் பொறுத்தப்பட்டு உள்ளதா எனவும் சோதனைகள் நடைபெற்றதாகவும் டெல்லி வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனைகள் முடிந்தவுடன் அவருக்கு டிபிரிஸிங்க் எனும் மனநல சோதனையும் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

மேலும், பாகிஸ்தான் இராணுவத்தில் அபிநந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரை மனதளவில் இலகுவாக்குவதற்காகவே இந்த சோதனைகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த சோதனைகள் முடிந்த பிறகு அபிநந்தன் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top