இப்படி எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார்
இந்த தொகுதியிலே
கல்முனை தொகுதியிலே
கல்முனையில்
தமிழர்களைப் பகைத்துக்கொண்டும் சாய்ந்தமருதில் முஸ்லிம் சகோதரர்களுக்கு
வழங்கப்பட்ட வாக்குறுதிப்படி அந்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றாமலும் எவ்வாறு கல்முனையைக் காப்பாற்றப் போகின்றார்களோ
அபிவிருத்தி செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.
தற்போதுள்ள
கல்முனை நகரத்தை பொலனறுவையில் இருப்பது போன்று சரித்திர கால நகரமாக மாற்றிவிட்டு
தமிழ் சகோதரர்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தோடு தமிழர் கூட்டமைப்பும், முஸ்லிம்
கட்சிகளும் ஒன்றாகப் பேசி வெளிநாட்டு உதவிகளைப் பெற்றாவது உடனடியாக இந்த அரசாங்கத்தின்
காலம் முடிவடைவதற்குள் புதிய நகரம் ஒன்றை
உருவாக்குவதே இதற்கு சிறந்த வழியாகத் தெரிகின்றது.
பிரச்சினைகள்
எழும்போது இப்படியே தடுத்துவிட்டால்
பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமா? நீறுபூத்த
நெருப்பாக இது மாறாதா? பிச்சைக்காரனின் புண்ணாக இன்னும்
எத்தனை சந்ததிகளுக்கு இந்தப்பிரச்சினைகளை விட்டு வைத்து அரசியல் விளையாட்டு விளையாடப்போகின்றார்கள்?
0 comments:
Post a Comment