இறக்குமதி பால்மா மாதிரிகள் பரிசோதனைக்காக
வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பு



இறக்குமதி செய்யப்பட்ட பால் மாக்களின் மாதிரிகளை சோதனை செய்யும் பொருட்டு ஏற்கனவே வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக விவகார பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.  

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் தரம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும், பிரதி அமைச்சர் புத்திக பத்திரனவும் கூறியுள்ள கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே,எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலே பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இவ்வாறு கூறியுள்ளார்.  

ஒருசில இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளில் மிருகக் கொழுப்பு கலந்திருப்பதாக தமது அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையின் ஒரு கட்டமாக பால்மாக்களின் மாதிரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  

சோதனை செய்வதற்கான செலவுத் தொகைகளும் அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம் சுகாதார அமைச்சருக்கும் தனக்கும் இடையில் இவ்விடயம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை.அமைச்சரின் கருத்து அவருடையது. அதேபோல் எனது கருத்து என்னுடையது என்றும் பிரதியமைச்சர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top