14.01.2020 அன்று நடைபெற்ற
 அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 



14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்கள் பினவருமாறு:
 01. தேசிய புலனாய்வு சட்டம்
 தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் முன் உணர்ந்து தெரிவித்து  அவற்றை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அத தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக இலங்கையின் புலனாய்வுப் பிரிவு விசேட பணிகளை நிறைவேற்றுவதுடன் அது நிறுவனம் என்ற ரீதியில் முன் உணர்ந்து தெரிவித்த அச்சுறுத்தல் மற்றும் கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தடுக்கக் கூடிய பயங்கரவாதம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் மற்றும் தேசிய பிர்ச்சினைகளில் வழங்கியுள்ள பரிந்துரைகள் தேசிய பாதுகாப்பை முன்னெடுப்பதற்கு பெரும் பின்புலமாக அமைந்துள்ளன.
புலனாய்வு பிரிவு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுடன் இடம்பெறும் செயற்பாடுகளை ஒழுங்குருத்துவதற்காகவும் புலனாய்வு பிரிவினரை வலுவூட்டி  அவர்களது நடவடிக்கை பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தேவையான அளவு உடனடி நிதி தற்பொழுது இல்லாததன் காரணமாக சில புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி அனைத்து புலனாய்வுத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவை ஒழுங்குறுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு பிரிவினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மகாவலி விவசாயம் நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் , உள்ளக வர்த்தக உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடிவிடுதல்

2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட  அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட அரச தனியார் ஒத்துழைப்பிற்கான தேசிய நிறுவனம் திறைசேறி செயலகம் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனை சபையுடனும் சுமார் 20 பேரைக் கொண்ட பணியாளர் சபையொன்றைக் கொண்ட நிதியமைச்சின் அலகாக செயல்படுகிறது. அரசாங்கத்தினால் தமது செயற்பாட்டை முறையாக முன்னெடுப்பதற்கும் பணிகளை ஒன்றிணைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதினால் இந்த அலகின்  தேவை இல்லை என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நிறுவனத்தை
மூடுவதற்காக சம்பந்தப்பட் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக திறைசேறி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பு ஏற்றல்

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகாமையில் மூலோபாய வீதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்திரி மூலம் அதனை உள்ளடக்கும் பிரதேசத்தைப் போன்று அண்டிய பகுதியிலுள்ளவர்களுக்கும் வைத்தியசாலை சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த வைத்தியசாலையின் மூலம் விமான நிலையத்திற்கு வருகைத் தரும் புலப்பெயரும் பயணிகளுக்கும் கடற்படை பயணிகளைப் போன்று சுற்றுலா பயணிகளுக்கும் வைத்திய சேவை வழங்கப்படுகிறது. இந்த வைத்தியசாலை டெங்கு முகாமைத்துவ மத்திய நிலையம் டெங்கு மற்றும் செந்நிற டெங்கு காய்ச்சல் சிகிச்சை ஆகியவற்றின் முகாமைத்துவத்திற்காக சிறந்த மத்திய நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையில் உள்ள வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக இதனை சகல அமைச்சுகளினதும் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது மேல்மாகாணத்தின் மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்     முன்னெடுக்கப்படும் இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் பொறுப் ஏற்பதற்காக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 1981ஆம் ஆண்டு  இல 66 இன் கீழான மஹாபொல உயர் கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்

மஹாபொல உயர்கல்வி நம்பிக்கை நிதியத்தின் நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் நிதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் நம்பிக்கை நிதி சபையின் அங்கத்தவராக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் செயற்படுகின்றார். அதே போன்று உயர் நீதிமன்ற நீதியரசர் அங்கத்தவராக உள்ளமை இந்த நம்பிக்கை நிதியத்திற்கான ஏதேனும் வழக்கு நடவடிக்கைகளில் சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு தடையாகும் என்பதினால் கௌரவ பிரதம நீதியரசர் அவர்களை இந்த நம்பிக்கை நிதி சபையிலிருந்து நீக்குவது பொருத்தமாகும் என்று பொது நடவடிக்கை தொடர்பான நம்பிக்கை நிதி சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொருத்தமான வகையில் மஹாபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை  நிதியத்தில் அங்கத்தவர்களை நியமிக்கக்கூடிய வகையில் 1981ஆம் ஆண்டு இலக்கம் 66 இன் கீழான மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதி சட்டத்தில் திருத்தத்தை மேற்கெர்ளவதற்காக உயர்கல்வி தொழில் நுட்பம் மற்றம் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் நிதியுதவியுடன் கண்டி சுரங்கத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
கண்டி மாநகர பிரதேசத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வு என்ற வகையில் புறவழி  சுரங்கத்தை (டீல Pயளள வரnநெட) நிர்மாணிப்பது பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது, கொரியாவின் பொருளாதர அபிவிருத்தி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியுடன் கண்டி சுரங்கப் பாதையை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இதற்கான பணிகள் தாமதம் அடைற்துள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு 252.30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆவதுடன் 199.27 அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்குவதற்கு கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி நிதியம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் சுரங்கப் பாதையை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்புபட்ட பெறுகை பணிகளை ஆரம்பிபிபபதற்காக வீதி மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. வன பாதுகாப்பு திணைக்களத்திற்குட்பட்ட அநுராதபுரம் தலாவ என்ற இடத்தில் அமைந்துள்ள காணியில் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் மூலம் சுற்றாடல் பூங்காவொன்றை நிர்மாணித்தல்

வருடம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் சுற்றுலா வலயம் ஒன்றான அநுராதபுரம், வன மற்றும் வனஜீவராசிகள் போன்ற இயற்கை வளங்களைக் கொண்டுள்ளதுடன் பெருமளவில் குளங்கள் மற்றும் வயல்களைக் கொண்ட மிகவும் கவர்ச்சிகரமான சிறியளவிலான  சூழலையும் கொண்டுள்ளது. இந்த வளங்களை பேண்தகு அபிவிருத்தி வகையில் பயன்படுத்தி சுற்றாடல் அபிவிருத்தியை மேம்படுத்தக் கூடிய சூழலைக்கொண்டிருப்பதுடன்  இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கை கூடுதலான வகையில் கவரக்கூடிய நிலைமை உண்டு. இதற்கமைவாக சுற்றுலா பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்பட்ட அநுராதபுரம் , தலாவ நாச்சிதுவ மற்றும் மத்திம நுவரகம பிராந்திய செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட 200 ஏக்கர் காணி தேசிய விலங்குகளைக் கொண்ட சுற்றாடல் பூங்காவாக ஸ்தாபிப்பதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வள அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. சீதாவக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பொதுவான கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல்

1999ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட் சீதாவக்க ஏற்றுமதி தயாரிப்ப வலயம் 2001ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு சபையினால் பொறுப்பேற்கப்பட்டது. இது 28 தொழிற்சாலைகளைக்கொண்டுள்ளது. இதன் மூலம் 23 300 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வலயத்திற்குள் தற்பொழுது முன்னெடுக்கப்படும் பொதுவான கழிவு சுத்திகரிப்பு நிலையங்களின் வலு 9500 கன மீற்றராக இருந்த பொழுதிலும் இங்கு அமைந்துள்ள தொழிற்சாலைகளின் மூலம் நாளாந்தம் பொதுவான கழிவு 12 400 மீற்றர் வெளியேற்றப்படுகின்றது. இதன் மூலம் தற்போது  வெளியேற்றப்படும் பொதுவான கழிவுகளை மேற்கொள்ளக்கூடிய  நிலையங்களின்  வசதி போதுமானதல்ல என்பதினால் ஏற்படக் கூடிய சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினைளைத் தடுப்பதற்காக உத்தேச இந்த பொதுவான கழிவு சுத்திகரிப்பு நிலையங்களின் வலுவை தாமதம் இன்றி அதிகரிக்க வேண்டும் என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சீதாவக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பொதுவான கழிவு சுத்திகரிப்பு நிலையங்களின் வலுவை நாளாந்தம் 15 000 கனமீற்றர்களாக அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இரசாயன பயன்பாட்டிற்காக பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை

உறுப்புக்களை மறுபடியும் ஊக்க மூட்டும் போது பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் இரசாயன பயன்பாட்டுக்கான 17 பொருட்களை வழங்குவதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆளு நுஆயுசு Pர்யுஆயுஆ (Pஎவ) டுவன. என்ற நிறுவனத்திற்கு மொத்த செலவாக 188.82 மில்லியன் ரூபாவை (வெட் வரியின்றி ) வழங்குவதற்காக சுகாதார மற்றும் தேசிய வைத்திய துறை சேவை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 09.

HLAஎன்ற பரிசோதனை எதிர்வினை விநியோகிப்பதற்கான பெறுகை

அவயங்களை மீளப் பொருத்துவதில் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்வதற்காகப் பயன்படுத்தப்படும் HLA  என்ற பரிசோதனை எதிர்வினை வழங்குவதற்கான பெறுகை அமைச்சரவைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய Ms. Emar Phama (Pvt) Ltd என்ற நிவனத்திற்கு மொத்த செலவில் 230.69 மில்லியன் ரூபாவை (வெட் வரியின்றி) வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. உர கொள்வனவை மேற்கொள்ளுதல்

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கமைவாக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்திற்கும்  வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்திற்கும்  15 000 மெற்றிக் தொன் யுரியா (கிரேனியுலா) வை விநியோகிப்பதற்கான , 1 மெற்றிக் தொன் 279.  68 அமெரிக்க டொலர் வீதம் மொத்த செலவாக 4.40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பெறுகையை  எமரோபா ஏசிய பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு மகாவலி விவசாயம் நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. பிரதமர் அலுவலகத்திற்கு உட்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை மூடிவிடுதல்

'சௌபாக்கிய தெக்ம' என்ற சுபீட்ச தொலைநோக்கு என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவையின் அனைத்து துறைகளுக்குமாக பொருத்தமான நபர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 2015 ஆம் ஆண்டில் பிரதமரின் அலுவலகத்திற்கு உட்பட்ட வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான தேவை இல்லை என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த அலுவலகத்தை மூடிவிடுவதற்காக பிரதமர், நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் நிவாரண பொதி

தமது தொழில் முறையை முழு அளவில் விரிவுபடுத்துவதற்காக புதிதாக கடனை பெற்றுக்கொள்வதற்கு சிரமத்தை எதிர்கொள்ளல் பெற்றுக் கொண்ட கடனை தொடர்ச்சியாக செலத்த முடியாமையினால் செயலிழந்துள்ள கடனுக்கான பல்வேறு கட்டணம் மற்றும் மேலதிக வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. பிணைக்காக வைக்கப்பட்ட தமது சொத்து வங்கியினால் ஏலமிடுதல் போன்றவற்றின் காரணங்களினால் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். கடந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சீர் குழைவான வரிக்கொள்கை மற்றும் வங்கி சட்ட விதிகள் காரணமாக இவ்வாறு வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இந்த தொழில் துறைகளை மேம்படுத்தவதற்காக பரிந்துரைகள் அரசாங்கத்தினால் கொள்கைக் கட்டமைப்பான சுபிட்சமான தொலைநோக்கு மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதுவரையில் செலுத்தமுடியாமல் உள்ள கடனை அறவிடுவதற்காக மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் அனைத்து வங்கிகளுக்கும் ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாவது நடவடிக்கையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினரால் அனுமதி பெற்ற வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 2019.12.31 திகதிக்கு செயலிழந்துள்ள நிலையில் உள்ள கடனின் ஆரம்ப தொகையை செலுத்துவதற்கான கடன் பெற்றவரினால் மேற்கொள்ளப்படும் எழுத்து மூலமான கோரிக்கையின் அடிப்படையில் 2020.12.31 வரையில் நிவாரண காலமொன்றை வழங்குவதற்கும் கடன்களின் தவணையின் பெறுமதியை அதிகரிக்காது நிவாரண காலப்பகுதிக்கு பின்னர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீடிப்பதற்கும் , 2019.12.31 திகதியன்று செயலிழந்துள்ள நிலைமையில் உள்ள கடனை அறவிடுவதற்காக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும் மொத்த தண்டப்பணமான வட்டியை இரத்து செய்வதற்கும் கடனை செலுத்தமுடியாமையினால் வீழ்ச்சிக் கண்டுள்ள தொழில் துறையை  மீண்டும் ஆரம்பிப்பதற்குமாக நிவாரண நிபந்தனைகளுக்கு உட்பட்டவகையில்  புதிய பணி மூலதன கடன் தொகையொன்றை வழங்கக்கூடிய  வகையில் ஒழுங்கு விதிகளுடனான கடன் நிவாரண பெகேஜ் ஒன்றை (நய சாஹான பெகேஜ்) நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அஸர்பைஜானில் இலங்கை மாணவர் மூவர் இறந்தமை 
2020 .01.09 அன்று அஸர்பைஜானில் தலைநகரான பாபு நகரில் மாடிவீடொன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்த இலங்கை மாணவர்களின் பூதவுடல்கள் அவசர தேவையாக கருத்திற் கொண்டு இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தெஹ்ரான் நகரிலுள்ள இலங்கைக் குழு சபையினால் அஸர்பைஜானில் மேற்கு கஷ்பியன் பல்கலைக்கழகம் ஈரானில் உள்ள அஸர்பைஜானின் தூதரக அலுவலகத்துடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்ட்டிருப்பதாக வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் இதனை விசேட சந்தர்ப்பமாக கருதி இந்த பூதவுடல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு செலவாகும் 1.5 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கத்தினால் பொறுப்பேற்பதற்காக வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம்.
சுபீட்ச தொலைநோக்கு என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு உட்பட்ட மைக்ரோ . மற்றும் ஏற்றதான துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவது நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ளது. சுபீட்ச தொலைநோக்கு என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கை மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள அபிவிருத்தி இலக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்கின் 17இற்கு அமைவானது. இதற்கமைவாக நாட்டின் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கத்தை கொண்ட கீழ்கண்ட பரிந்துரைகளுக்கு முக்கியத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்தரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கு அத்தியாவசியமான உணவை வழங்கி உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.
• 100,000 வறுமைக் குடும்பங்களுக்காக 100,000 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல்
• 1 வீடொன்று - கிராமமொன்று' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வறுமைக் குடும்பங்களுக்காக வீடுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்
ஆகக் குறைந்த வகையில் 10 இலட்ச வீடுகளுக்கு தரமான வீதி வசதிகளை வழங்குவதற்காக 1 இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
சிறிய வர்த்தக அபிவிருத்தி சுய தொழில் வாய்ப்பு மனைத்தேவை மற்றும் மனை வாழ்வாதார வேலைத்திட்டத்திற்காக முக்கியத்துவம் வழங்கி அதற்கான கடனுக்கான இலகுவாக பிரவேசிப்பதற்கான வசதியை ஏற்படுத்தல்

15. நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மெற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள்

தற்பொழுது ஏற்பட்டுள்ள சர்வதேச அரசியல் மோதல்களினால் எரிபொருளுக்கு ஏற்படக்கூடிய  தட்டுப்பாடு மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நாட்டில் போதுமான எரிபொருள் தொகையை முன்னெடுப்பதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை கனிய வள தொகை களஞ்சிய நிறுவனமும் ஒன்றிணைந்து தமது அமைச்சினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து  மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரினால் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

16. பெருந்தொட்டத்துறையில் சம்பளத்திற்கான பரிந்துரையை நடைமறைப்படுத்துதல்
 சுபீட்ச தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிற்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக  நாளாந்தம் 1000 ரூபா ஆகக்குறைந்த வேதனத்தை செலுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பெருந்தோட்டத்துறையில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக நாளாந்தம் ஆகக் குறைந்த வேதனமாக ரூபா 1000 செலுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top