பாடசாலை மாணவிகளை
பாலியல் துஷ்பிரயோகம் செய்த
டாக்டருக்கு விளக்கமறியல்
நான்கு
பாடசாலை மாணவிகளை
பாலியல் துஷ்பிரயோகம்
செய்த குற்றச்சாட்டில்
சந்தேகத்தில் கைதான டாக்டரை விளக்கமறியலில் வைக்குமாறு
அம்பாறை நீதிவான்
நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த
சம்பவத்தில் கைதான டாக்டரை அம்பாறை நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம்
21 ஆம் திகதி
வரை சந்தேக
நபரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
(சம்பவத்தின்
பின்னணி)
அம்பாறை
மாவட்டம் உஹன,
கோணாகொல்ல பகுதியில்
உள்ள சேனரத்புர
பிராந்திய வைத்தியசாலையில் கடமையாற்றும்
டாக்டர் ஒருவர்
நான்கு பாடசாலை
மாணவிகளை பாலியல்
துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
உஹன
பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவிகள்
நால்வர் இன்று
(07) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில்
கலந்து கொள்வதற்காக
மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக
சென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க
சென்ற நான்கு
சிறுமிகளே இவ்வாறு
துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
சம்பவம் குறித்து
பாதிக்கப்பட்ட சிறுமிகள் சக மாணவர்களிடம் தெரிவித்த
பின்னர் வகுப்பாசிரியரின்
கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து
மருத்துவச் சான்றிதழ் வழங்குவது எனும் போர்வையில்
துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட
டாக்டர் கைது
செய்யப்பட்டார்.
இதனை
அடுத்து பாதிக்கப்பட்ட
18, 17, 14 மற்றும் 4 வயதுடைய சிறுமிகள்
முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிஸார் உடனடியாக
டாக்டரை கைது
செய்து தடுப்பு
காவலில் வைத்து
விசாரித்த நிலையில்
குறித்த வைத்தியரை
அம்பாறை நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.