சுரக்ஷா மாணவர் காப்புறுதி குறித்து
கல்வி அமைச்சர் விளக்கம்
சுரக்ஷா
மாணவர் காப்புறுதி
வேலைத்திட்டம் நாட்டில் மாணவர்களின் நலனுக்காக அரசியலுக்கு
அப்பால் தொடர்ந்தும்
நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனைத்து
அரசாங்க பிரிவெனாக்கள்,
தனியார் பாடசாலைகள்,
சர்வதேச பாடசாலைகள்
உள்ளிட்ட பாடசாலை
மாணவர்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும்
சுரக்ஷா மாணவர்
காப்புறுதி வேலைத்திட்டம் நாட்டின் மாணவர்களின் நலனுக்காக
முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும்.
குறுகிய
அரசியல் நேக்கத்திற்கு
அப்பால் இதனை
மதிப்பீடு செய்வதுடன்
அதில் பிரச்சினைகள்
முறைகேடுகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்வதற்கு
தாம் எப்பொழுதும்
தயாராக இருப்பதாக
கல்வி அமைச்சர்
டலஸ் அழகப்பெரும
தெரிவித்துள்ளார்.
சுரக்ஷா
மாணவர் காப்புறுதி
கோரிக்கை சம்பந்தப்பட்ட
காப்புறுதி நிறுவனத்தினால் திருப்பி அனுப்பட்டதாக சில
ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அமைச்சர்
கவனம் செலுத்தி
இந்த விடயங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
கல்வி
அமைச்சின் பாடசாலை,
சுகாதாரம் மற்றும்
போசாக்கு சபையுடன்
இணைத்து இந்த
வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். சுரக்ஷா
மாணவர் காப்புறுதி
தொடர்பாக கேட்டறிந்து
கருத்துக்கள் அல்லது முறைப்பாடுகள் இருக்குமாயின் அவற்றை
சமர்ப்பிக்க முடியும். இதற்காக 011 2784
163 மற்றும் 0111 2784 872 என்ற தொலைபேசி
இலக்கங்கள் மூலம் கிளையுடன் தொடர்பு கொள்ள
முடியும்
0 comments:
Post a Comment