சாய்ந்தமருது பொது மக்களுக்கு !
அன்பான வேண்டுகோள்!!
சாய்ந்தமருது பழைய
ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோனா
பகுதி கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.வை.எம். ஜவ்பர் மற்றும் நலன்
விருப்பிகளினால் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தி அவ்விடத்தை
பராமரிக்க இருப்பதால்
அவ்விடத்தில் குப்பை கழிவுகளை வீசி விட்டுப்
போவதை நிறுத்துமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இன்று 19 ஆம் திகதி முதல் வீட்டிலுள்ள கழிவுகளை போடுவதற்கு மாற்று வழியாக கல்முனை மாநகரசபையின் குப்பை கழிவுகளை
சேகரிக்கும் ரெக்டர்
சரியாக காலை
6.30-7.30 வரை அவ்விடத்தில் தரித்து நிற்கும்.
அந்த
நேரத்தில் மட்டும் உங்களது வீட்டுக் குப்பை கழிவுகளை கொண்டு
வந்து வெளியில் போடாமல் அந்த டெக்டரில்
போடுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே தினத்தில் அதே
டெக்டர் அல்-ஹிலால் வீதியிலுள்ள தோனா பாலத்தடியில்
சரியாக 8.30 லிருந்து 9.30 மணிவரை தரித்திருக்கும். அந்த பகுதியில்
வசிப்பவர்கள் அந்த நேரம் சென்று தங்கள் வீட்டுக் குப்பைகளை டெக்டரில் போடமுடியும் என்றும்
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது
தவிர்ந்த ஏனைய
நேரங்களில் குப்பைகளை அவ்விடங்களில் வீசி விட்டுப்
போவதை நிறுத்துமாறு
மிகவும் தாழ்மையாக
கேட்டுக் கொள்ளப்படுவதுடன்
அதை மீறி
செயற்படுவர்களுக்கு சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment