இது எப்படியிருக்கிறது?
பாடசாலை நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டுக்கு சிரிப்பதா?
அல்லது பைசல் காசிம் எம்.பியின்
செயல்பாட்டுக்கு சிரிப்பதா?
பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
நிந்தவூர்
அரசடித்தோட்டம் ஜேர்மன் நட்புறவு கனிஷ்ட பாடசாலையில்
அமைக்கப்பட்ட சுற்றுமதில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்
திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான பைசல்
காசிம் அவர்களினால்
றிபன் வெட்டி கையளிக்கப்பட்டிருப்பது பலருக்கும்
நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவருக்கு றிபன் கட்டி திறப்பதற்கு இப்படி கோமாளித்தனமாக
ஏற்பாடு செய்த பாடசாலை நிர்வாகத்தினரைப் பார்த்து சிரிப்பதா? அல்லது பைசல் காசிம் எம்.பியின் இந்த செயல்பாட்டுக்கு சிரிப்பதா? என்று
இந்த செயல்பாட்டை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாடசாலை
அதிபர் எம்.ஐ.இஷ்ஹாக்
தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் கல்முனை
வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர்
எம்.ஏ.எம்.றசீன்,
நிந்தவூர் பிரதேச
சபை உறுப்பினரும்
பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளருமான எம்.எம்.எம்.அன்சார் பெற்றோர்கள்,
மாணவர்கள் உள்ளிட்ட
பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment