சாய்ந்தமருது தோணாவை அண்டியுள்ள பிரதேசங்களில்
குப்பைகளை அகற்றும் பரிட்சார்த்த பணி வெற்றி
பொதுமக்களும் திட்டத்திற்கு ஆதரவு
பாராட்டும் தெரிவிப்பு
சாய்ந்தமருது வைத்தியசாலை
வீதியிலுள்ள தோணா பாலத்திற்கு அருகில்
கழிவுகளை கண்டபடி கொட்டி அசுத்தப்படுத்துவதையும்
நாளாந்தம் மாநகர
வாகனத்தின் மூலம் கழிவு சேகரிக்கப்பட்ட பின்னர்
மீண்டும் அவ்விடத்தை
அசுத்தப்படுத்துவதால் கல்முனை மாநகர
முதல்வர், ஆணையாளர்,
வட்டார உறுப்பினர்
மேற்பார்வையாளர், ஊழியர்கள் மற்றும் பிரதேச
குடியிருப்பாளர்கள் பாரிய
உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதுடன் பிரதேசத்தின் சூழலும் மாசடைந்து காணப்பட்டது.
இந்த அவல நிலையைப் நிவர்த்திக்கும் நோக்கமாக பல கலந்துரையாடல்கள், ஆலோசணைகளின் நிமிர்த்தம் கல்முனை
மாநகர சபையின் சாய்ந்தமருது 20ம் வட்டார
உறுப்பினர் எம்.வை.எம். ஜஃபர்
அவர்களினதும், ஊர் நலன்விரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும் குறித்த இடத்தில்
மாநகர கழிவு
அகற்றும் வாகானத்தை
நிறுத்தி காலை
06.30 தொடக்கம் காலை 7.30 மணி வரையும் ஒரு
மணித்தியாலத்திற்கு குப்பைகளை சேகரிக்கும்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் பிரகாரம் இன்று 19 ஆம் திகதி காலை சாய்ந்தமருது வைத்தியசாலை
வீதியிலுள்ள தோனா பாலத்திற்கு அருகில் குடியிருப்பாளர்களின் வீட்டுக் குப்பைகளை
சேகரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக திட்டம் செயல்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இத்திட்டம்
குறித்து பொதுமக்கள்
கல்முனை மாநகர
முதல்வர், ஆணையாளர்
மற்றும் 20ம்
வட்டார உறுப்பினர்
எம்.வை.எம். ஜஃபர் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இப்படியாக குப்பை சேகரிக்கும் இத்திட்டம் மாநகரத்தின் சகல
பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதன் காரணமாக இரவில் கண்டபடி போடப்பட்டு கால்நடைகளாலும்
காகங்களாலும் வீதியெல்லாம் சிதறி விடப்படும் குப்பைகளை தொழிலாளர்கள் சிரமப்பட்டு
அள்ளுவதும் அதற்காக செலவிடப்படும் நேரமும் தவிர்க்கப்படுவதுடன் கல்முனை மாநகர சபையின்
கழிவு அகற்றும் வாகனம் (குப்பைகளைச்
சேகரிப்பதற்காக) வீதியெங்கும் வலம்வரும்போது ஏற்படும் எரிபொருள் செலவும் மீதப்படும்
என்பதை கல்முனை மாநகர சபை நிர்வாகத்திற்கு மக்கள் விருப்பம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.
0 comments:
Post a Comment