உக்ரைன் விமானத்தை வீழ்த்தியோர் கைது
மேற்காசிய நாடான ஈரானில், ஐரோப்பிய நாடான உக்ரைனின் விமானம், தவறுதலாக வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம், கீழே விழுந்து நொறுங்கியதில், 176 பேர் கொல்லப்பட்டனர்.பல நாட்களாக மறுத்து வந்த நிலையில், 'தவறுதலாக ஏவுகணை செலுத்தப்பட்டதில், விமானம் தாக்கப்பட்டது' என, ஈரான் ஒப்புக் கொண்டது.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், ஈரானைச் சேர்ந்தவர்களே. அதையடுத்து, அரசுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், 'விமானத்தை வீழ்த்திய விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்க வில்லை.''விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், விரைவு நீதிமன்றம் அமைத்து, விசாரணை நடத்தப்படும்,'' என, ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment