வில்வித்தை பயிற்சியில்
சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு

வில்வித்தை பயிற்சியின் போது, 12 வயது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்தது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அசாமிலுள்ள சபுயாவில், இந்திய விளையாட்டு கமிஷனின் அசாம் மாநிலத்திற்கான மையம் உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சியில் 12 வயதுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, ஷிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், 'சிறுமியின் தோள்பட்டை எலும்பை துளைத்திருந்தது. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top