தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல்:
மோதலில் படுகாயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த பெண்
இன்று அதிகாலை உயிரிழப்பு
கல்முனை பொலிஸ் பிரிவில் சம்பவம்
தாபரிப்பு
பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப
மோதலில் படுகாயமடைந்து
சிகிச்சை பெற்று
வந்த பெண்
ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கல்முனை
பொலிஸ் பிரிவில் கடந்த 9 ஆம்
திகதி அதிகாலை
பெற்றோல் கலனுடன்
திடீரென வீட்டினுள்
உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிய
பெண்ணை அழைத்து
அவர் மீது
பெற்றோல் ஊற்றி
எரித்துள்ள நிலையில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு
3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று(13) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில்
கல்முனை வடக்கு
ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் முன்னாள்
கணவர் பொலிஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
சம்பவத்தில் கலந்தர் லெப்பை கமருன் நிஸா
(வயது-42) என்ற
7 பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.
குறித்த
சம்பவத்தில் காயமடைந்து பொலிஸாரினால் தற்போது கைதாகியுள்ள சந்தேக நபர் இப்ராஹிம்
உதுமாலெப்பை நிசார் (வயது 48) என்பவராகும்.
குறித்த
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் தம்பதிகள் எனவும்
ஒரு வருடத்திற்கு
முன்னர் விவாகரத்து
செய்த பின்னர்
நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை சந்தித்ததுடன்
தாபரிப்பு பணம்
செலுத்திய விடயம்
ஒன்றில் ஏற்பட்ட
முறுகல் காரணமாக
இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.