2020.01.08 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
 மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




2020.01.08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்வி புரிந்துணர்வை மேம்படுத்துதல், நூல் நிலையங்களுக்கான பரஸ்பர புரிந்துணர்வு, கல்வி பணியாளர் சபை, ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களின் சேவையை நிறுவனத்துக்கு இடையில் பரிமாறிக்கொள்ளுதல், பரஸ்பர கல்வி சுற்றுலா மூலோபாய ஆய்வு மானியம் அல்லது புலமைப்பரிசில்களை வழங்குதல் கல்வி ஆசிரியர்களினதும் ஆய்வாளர்களினதும் பயிற்சிக்கான வசதிகளை வழங்குதல், பிரகடனப்படுத்தப்பட்ட கலைப் பீட நூல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறும் மகாநாடு, செயலமர்வு மற்றும் இரு தரப்பினரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அவற்றில் பரந்துபட்ட ஒத்துழைப்பை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்காக மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு, உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 'கமட்ட கெயக் - ரட்டட் ஹெடக்' என்ற திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் சிறந்த வசதிகளைக் கொண்ட வீடு ஒன்று

நாட்டை மேம்படுத்தும் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து குடும்பங்களுக்கும் சிறந்த வசதிகளைக் கொண்ட வீட்டில் வாழ்வதற்கு வசதி செய்வதன் மூலம் பேண்தகு அபிவிருத்தியை இலக்கையில் பூரத்தி செய்யும் நோக்கில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்களினால் 'கமட்ட கெயக் - ரட்டட் ஹெடக்' என்ற வேலைத்திட்டத்தை விரைவாகவும் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திடம் என்ற ரீதியிலும் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரச அதிகாரிகளின் இணைப்புடனும் கிராமிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், அரச அதிகாரிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூகத்தின் நலனைக்கொண்ட சமூக குழுக்கள் ஊடாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அமைவாக இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் முக்கியத்துவம் வழங்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிப்பதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு 6 இலட்சம் ரூபா (06) நிதி உதவி நிர்மாண பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலான தவணைக் கொடுப்பபை வழங்கி 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கான மானியத்தை வழங்குவதற்காக பிரதமர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. காலி பெலிகஹ சந்தி என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டட தொகுதியின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல்.

அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு தற்பொழுது நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ள காலி பெலிகஹ சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பொறியியல் பணிகள் தொடர்பாக மத்திய ஆலோசனை செயலகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டு காலி நீதிமன்ற கட்டட தொகுதியை அங்கு ஸ்தாபிப்பதற்காக மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2020 – 2022

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம்' 2016 – 2018 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையினாலும் எதிர்பாராத காலநிலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை எட்டுவதற்கு முடியாமல் போனது. இதற்கமைவாக பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தியின் பயன்களை அதிகரித்தல், அதன் பின்னரான அறுவடைக்கான பாதிப்பை குறைத்தல், பொறுமதி சேர்க்கபட்ட புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்துதல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி, வன விலங்குகளினால் எற்படக்கூடிய பாதிப்பைக் குறைத்தல், பண்ணை அபிவிருத்தியின் மூலம் விதை மற்றும் தளபாடப் பொருட்கள் தயாரிப்பை அதிகரித்தல், பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறையை பயன்படுத்துவதன் மூலம் சுற்றாடலுக்கு பொருத்தமான விவசாயத்தை பிரபல்யப்படுத்துதல், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் 'வளமான' விவசாய தயாரிப்பு தொகுதி கிராமத்தை ஸ்தாபித்தல் போன்ற திட்டங்கள் மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் 2020 - 2022 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நெல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக உரத்தை வழங்குதல்

'சௌபாக்கிய தெக்ம' வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு சிறுபோகம் ஆரம்பம் முதல் நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விசாயிகளுக்கு ஆகக்கூடிய 2 ஹெக்டர் வரையில் யூரியா மும்மை, சுப்பர் பொஸ்பேட் (ரி.எஸ்.பி) மற்றும் மியூரியெட் ஒவ் பொட்டாஸ் (எம்..பி) ஆகிய உர வகைகளின் சிபாரிசு அளவை வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிரத்தி அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. பல்லின அபிவிருத்தி பணிக்குழுவை நிறுவுதல்

குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியைக்கொண்ட 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி பணிக்குழு ஒன்றை அரச திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பிரிந்துரைக்கு 2019.12.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த திணைக்களத்தின் கீழ் 'அபிவிருத்தி பணி உதவி சேவை' என்ற பெயரில் சேவை ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்த சேவைக்காக அரசாங்க பாடசாலைகளில் தரம் 8 (08) சித்தி எய்திய 100,000 பேரை இணைத்துக்கொள்வதற்காகவும் மகாவலி, விவசாய நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. மேட்டார் வாகன (வீதி அடையாளமிடல் சமிஞ்ஞை மற்றும் வீதி குறியீட்டை மேற்கொள்ளுதல். கட்டளைகளை பிறப்பிக்கும் வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

மோட்டார் வாகன சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பெருந்தெருக்களில் வீதி அடையாளமிடல் சமிஞ்ஞை மற்றும் வீதி குறியீடை மேற்கொள்ளும். பிரகடத்தை மேற்கொள்வதற்காக இலக்கம் 1940 21 இன் கீழான 2015.11.12 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் 'தூர போகுவரத்து சேவை பஸ்களுக்காக வரையறுக்கப்பட்ட பஸ்தரிப்பிடம் ஒன்றை' எடுத்துக்காட்டுவதற்காக குறியீட்டின் மூலம் அடையாளப்படுத்தபடவில்லை. இவ்வாறான அடையாளம் இல்லாததன் காரணமாக பஸ் சாரதிக்கு போன்றே பயணிகளுக்கும் ஏற்படும் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு தூர போக்குவரத்து சேவைகளுக்காக வரையறுக்கப்பட்ட தரிப்பிடம் ஒன்றை அறிவிப்பதற்காக புதிய குறியீட்டை உள்ளடக்கி இலக்கம் 2128 9 என்ற இலக்க 2019.06.18 திகதி அன்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. யானைகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பாமரித்தல் மற்றும் பின்னர் முன்னெடுப்பதற்கான உத்தேச வேலைத்திட்டம்.

இலங்கையில் நிலவும் யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களின் காரணமாக வருடத்தில் சுமார் 80 பேர் உயிரிழப்பதுடன் 250 காட்டு யானைகள் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் மற்றும் உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார இழப்பும் நாட்டுக்கு ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரச அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்துடன் கிராமிய பிரதேசம் மற்றும் மாவட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் ஒழுங்குறுத்தல் குழுவை அமைப்பதற்கும் அதற்கான ஆலோசனையை அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்குவதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வள அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 40 மில்லி கிராமைக் கொண்ட (40 mg) கொண்ட ரெனெக் ரிப்லேஸ் 20,000 குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை.

இருதய நோய் ஏற்படும் நபர்கள் மரணத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரெனெக் ரிப்லேஸ் ஊசி மருந்து 40 மில்லி கிராம் (40 mg) ஐக் கொண்ட 20,000 குப்பிகளின் பெறுகைக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிக்கு அமைய இந்தியாவில் M/S Boehringr Ingetheim India (Pvt) Ltd., என்ற நிறுவனத்திடம் மொத்த செலவு மற்றும் வாகன வாடகை விலையுடன் 8.75 மில்லியன் அமெரிக்க டொலர்களுகளை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 4,000 யு 0.4 மி.லீ. 500,000 சிறிஞ்சர்களை விநியோகிப்பதற்கான பெறுகை மீள் நிரப்பப்பட்ட எனோக்ஸ பாரின் சோடியம்

இருதய நோயாளர்கின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எனொக்ஸ பாரின் சோடியம் 4,000 ஊசிகள் யு, 0.4 மி.லீ. 500,000 சிறிஞ்சர் விநியோகிப்பதற்கான பெறுகை தொடர்பில் சுகாதாரம் மற்றும் சுதோசிய வைத்திய சேவை அமைச்சினால்; அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசு, பெறுகை மேல் முறையீட்டு சபையினால் கவனத்தில் கொண்டு அமைச்சரவைக்கு அதன் பெறுகைக்காக மேற்கொள்ளபடவேண்டிய சிபரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெறுகை மேன்முறையீட்டு சபையினால் இந்த சிபாரிசுகளைக் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பெறுகையை MS ABC Pharma Servics (Pvt) Ltd  என்ற நிறுவனத்திடம் மொத்த செலவு இலங்கை ரூபாவில் 396.74 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.



11. இரத்தத்தை தானம் வழங்குவோர் மத்தியில் எச்..வி 1 ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி நோய்த் தொற்றை அடையாளங் காணும் PProcleix Tigris NAT கட்டமைப்புக்கான அமிலத்தை பரிசோதனை செய்து 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான பெறுகை

இரத்தத்தை தானமாக வழங்குவோர் மத்தியில் எச்..வி 1 ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் அமில பரிசோதனையை மேற்கொண்டு 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை வழங்குவதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/S Apcot marketing (Pvt) என்ற நிறுவனத்திடம் மொத்த செலவான 3.09 மில்லியன் அமெரிக்க டொலர்களை (வட்டி இன்றி) வழங்குவதற்காக சுகாதார சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சோடியம் குளோரைட் Intracellular solvents பிபி 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் தடுப்பூசி யுஎஸ்பி, 0.9% w/v 500 லீற்றர் 11 000 000 போத்தல்களை விநியோகிப்பதற்கான பெறுகை

நோயாளர்களின் இரத்த தொகுதி குறையும் சந்தர்ப்பத்தில் குறையும் இரத்த அளவை மீண்டும் மீளப் பதிலீடு பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சோடியம் குளோரைட் ஐவெசயஉநடடரடயச ளழடஎநவெள பிபி 0.9% w/v அல்லது சோடியம், குளோரைட் தடுப்பூசி யுஎஸ்பி, 0.9% w/v 500 லீற்றர் தடுப்பூசி போத்தல்கள் 11,000,000 த்தை விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சீனாவைச் சேர்ந்த M/S Sitchunan Kelun Pharmaccutical Co. Ltd. என்ற நிறவனத்திடம் மொத்த செலவு மற்றும் வாகன வாடகை விலையுடன் 2.92 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. 625 மில்லி கிராம் பிபி கோஅமொக்ஸிக்லேவ் குளிசை அல்லது அமொக்ஸிலின் மற்றும் க்ளேச்லென்ட் பொட்டாசியம் குளிசை யுஎஸ்பி 625 மில்லிகிராமைக் கொண்ட 32 000000 குளிசைகளை விநியோகிப்பதற்கான பெறுகை

பெருமளவில் பயன்படுத்தப்படும் மீளப் பதிலீடு மருந்தான கோ அமொக்ஸிக்லேவ் என்ற பிபி 525 மில்லி கிராம் குளிசைகள் அல்லது அமொக்ஸிலின் மற்றும் குளோவுலேனட் பொட்டாசியம் குளிசை யுஎஸ்பி 625 மில்லிகிராமைக் கொண்ட 32,000,000 குளிசைகளை விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின் M/S. Indchemie Health Specialties (Pvt) Ltd. என்ற நிறுவனத்திடம் மொத்த செலவு மற்றும் வாகன வாடகை விலையுடன் 1.56 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் 2 சிவில் வேலைத்திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் 99 கிலோ மீற்றர் நீளமான வீதியை புனரமைத்தல் மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பதற்கான 3 பொதிகள் மற்றும் அதே மாவட்டத்தில் 104 கிலோ மீற்றர் நீளமான வீதியை புனரமைத்தல் மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்காக 5 பொதிகள் அடங்கிய ஒபந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய முறையே 2165.26 மில்லியன் ரூபாவிற்கு M/S. RR Construction Pvt Ltd. என்ற நிறுவனத்திடமும் 2296.13 மில்லியன் ரூபாவிற்கு M/S. Finite Lanka (Pvt) Ltd. என்ற நிறுவனத்திடமும் வழங்குவதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. முப்பது (30) மாத காலத்திற்குள் விரிவான அளவில் 1 இலட்சம் சிலிப்பர் கட்டைகளை தயாரித்து விநியோகிப்பதற்கான புதிய ஒப்பந்தமொன்று அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திடம் (SEC) வழங்குவதற்கான பரிந்துரை

இலங்கை ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ரயில் பாதைக்கான முக்கியமாக பலகையிலான சிலிப்பர் கட்டைகள் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மர பலகைக்கான பாரிய தட்டுப்பாட்டின் காரணமாக விசேடமாக ரயில் பாதை பராமரிப்புக்கு தேவையான சிலிப்பர்; கட்டைகளுக்கான முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் முடியாமல் போயுள்ளது. இதனால் தற்பொழுது ரயில் பாதையை முன்னெடுப்பதில் நிலவும் பலகை சிலிப்பர் கட்டை தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கும் ரயில் திணைக்களத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்காக உள்ள சிலிப்பர் கட்டை தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் அந்த திணைக்களத்திற்கு கொங்ரீட் சிலிப்பர் கட்டைகளை பெருமளவில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 30 மாத காலப்பகுதிக்கு முகாமைத்துவ பராமரிப்பு கட்டணம் அடங்கலாக 1 சிலிப்பர் கட்டைக்காக 6.876.00 ரூபா வீதம் 1 இலட்சம் கொங்ரீட் சிலிப்பர் கட்டைகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இந்திய கடன் உதவி நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்தல்

இந்திய கடன் ஆலோசனை முறையின் கீழ் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 50 தொடக்கம் 54 ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பஸ்களையும் 32 - 35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் இலங்கை போக்குவரத்து சபையினால் பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க மற்றும் வசதிகளைக் கொண்ட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக தனது தேவையை மீண்டும் மதிப்புPடு செய்து நீண்ட தூர பயணம், நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் உள்ள முக்கிய வீதிகளைப் போன்று கிராமிய பிரதேசத்தில் குறுக்கு பாதைகளில் பயன்படுத்தக் கூடிய பஸ் வகைகள் மற்றும் தேவையின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்திய கடன் திட்ட முறையின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பஸ்களுக்குப் பதிலாக 30 - 35 புதிய 500 பஸ்கள் மற்றும் விநியோகிக்கப்படும் உயரத்தைக் கொண்ட 42 - 45 ஆசனங்களைக் கொண்ட புதிய 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. ஆழமான கடலில் மணல் அகழ்வதன் மூலம் கல்கிஸை தொடக்கம் அங்குலான வரையிலும் களுத்துறை கெலிடோ கடற்கரை வரையிலுமான மீள்தரவுத் திட்டம்

கொள்ளுப்பிட்டி மற்றும் மொரட்டுவக்கிடையில் உள்ள அங்குலான கரையோரம் பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கரையோரமாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இந்த பிரதேசத்தில் பெருமளவில் குழிகள் பறிக்கப்படுகின்றமையினால் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பற்ற கல்வேலி பயன்படுத்தப்பட்டமையினாலும் கரையோரம் இழக்கப்பட்டுள்ளது. இதுவரையில் களுத்துறை களுகங்கை முகத்துவாரத்திற்கு அருகாமையில் சுமார் 2 கிலோமீற்றர் வரையிலான வெலிவெட்டி என்ற இடம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முன்னணி கெலிடோ கரையோரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குலானையில் இருந்து கல்கிஸை வரையில் 4 கிலோமீற்றரும், களுத்துறை கெலிடோ கரையோரத்திலிருந்து கல்கிஸை வரையிலான 4 கிலோமீற்றரும், களுத்துறை கெலிடோ கரையோரத்தில் 2 கிலோமீற்றர் வரையிலான பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்காக ஆழ்கடலில் மணல் அகழ்வை மேற்கொண்டு கரையோரத்தை வலுப்படுத்தும் திட்டம் அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கரையோர திட்டத்திற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s. Rohde Nielsen A/S. என்ற நிறுவனத்திடம் 4.40 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. புதிய வரி பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல்.

அமைச்சரவையில் இதற்கு முன்னர் அனுமதி பெறப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப வேலைத்தி;ட்டத்தின் கீழ் வரிக் கொள்கை பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக வரிசட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக சட்ட திருத்த தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசியத்தை கட்டியெழுப்பும் வரி (திருத்தம்), துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி (திருத்தம்), சட்டம் பொருளாதார சேவைக்கட்டணம் (திருத்தம்), திருத்த சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்தம்), திருத்த சட்டமூலம் என்ற திருத்த சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அந்த திருத்த சட்டம் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

19. தேசிய வருமான திருத்த சட்டமூலம்

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொருளாதார மேம்பாட்டு ஆரம்ப வேலைத்திட்டத்தின் கீழ் வரிக்கொள்கை பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக வரி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கமைவாக வட்டி வருமானத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான வரியிலிருந்து விடுவித்தல், சம்பாதிக்கும் பொழுது செலுத்தப்பட வேண்டிய துணை நிறுவன சட்ட திருத்தத்தை மேற்கொள்ளுதல், சேவை அடிப்படையில் சம்பந்தப்பட்ட வருமானம் வரி வீதாசார திருத்தத்தை மேற்கொள்ளுதல், வருமான அடிப்படையிலான வரியிலிருந்து நீக்குதல் மற்றும் விகிதாசாரம் போன்றவை தொடர்பிலான உத்தேச அபிவிருத்தியை உள்ளடக்கி தேசிய வருமான சட்ட திருத்தத்திற்காக திருத்த சட்டமூலத்தை ஒழுங்குபடுத்தவதற்கு சட்ட திருத்த மூலத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top