சாய்ந்தமருது அல்- தைபா அரபுக் கல்லூரி
சட்டபூர்வமாக்கபட்டு
உலமா சபை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல்
உள்ளடக்கிய ஆளுனர் சபையால் நிருவகிக்கப்படவேண்டும்



சாய்ந்தமருதை தலைமையகமாகக் கொண்டு பெண் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியை வழங்கும் நோக்கில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அல்- தைபா பெண்கள் அரபுக் கல்லூரியை உருவாக்கி அதனை நிருவகித்து வரும் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள் பாராட்டுக்குரியவர்.
.
அரசாங்க நிலத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்று அரபு நாடுகளின் நிதி. உதவியின் மூலம் நிருமாணம் செய்யப்பட்ட பாரிய கட்டிடவசதிகளுடன் இயங்கி வருகிறது.

தற்போது மௌலவி ஆதம்பாவா அவர்களின் தலைமையிலான நிருவாக சபை ஒன்று இதனை நடாத்தி வருகின்றது.
இப்போது மக்களுக்கு எழுகின்ற கேள்வி மௌலவி ஆதம்பாவா அவர்களின் மரணத்தின் பின்னால் இந்த அரபுக் கலாசாலை பராமரிப்பு எவரிடம் இருக்க போகின்றது.

இந்த அரபுக்கலாசாலை குறித்து சாய்ந்தமருது மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

இந்த லாசாலை வக்பு செய்யப்பட்டுள்ளதா?
இதன் ஆளுனர் சபை யார்? 
இந்த கலாசாலைக்கு தனியானவங்கிக் கணக்கு பேணப்படுகிறதா?
பல்வேறு கேள்விகள் எழுவது இயற்கையானது.

எனவே, இந்த அரபு கலாசாலை பாராளுமன்ற கூட்டிணைவு சட்டம் ஒன்றின் மூலம்
அங்கீகரிக்கப்பட வேண்டும். இக்கலாசாலை நிருவாகம் சாய்ந்தமருது உலமா சபை, சாய்ந்தமருது ஜும் பள்ளிவாசல் ஊர் நம்பிக்கையை பெற்ற கனவான்கள் உள்ளடக்கப்பட்ட ஆளுனர் சபை ஒன்று நியமிக்கப்பட்டு அவர்களால் நிருவகிக்கப்படவேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top