ஈரான், ஈராக்கில் அமெரிக்க
விமானங்கள் பறக்க தடை
ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 12 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment