அஷ்ரப் இருந்திருந்தால்
ரவூப் ஹக்கீம் அரசியலில் இருந்திருக்கவே மாட்டார்:
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தெரிவிப்பு
மறைந்த அஷ்ரப் (முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்) உயிருடன் இருந்திருந்தால் ரவூப் ஹக்கீம் அரசியலில் இருந்திருக்க மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்த தான் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார்.
அதனால் எழ போகும் பிரச்சினைகளை அறிந்த அவர் அப்போதே கட்சியின் பெயரை தேசிய ஐக்கிய முன்னணி என மாற்றினார்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த பின்னர் ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றதாக தெரிவித்தார்.
அந்த இடத்தில் அவர் தெரிவித்த கருத்தே நான் கட்சியில் இருந்து விலகி செல்ல காரணம். தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூப் ஹக்கீம் அரசியல் காட்சியில் இருந்திருக்க மாட்டார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பல உயிர்த்தியாகங்களுக்காக அன்று அவருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவமே கண்டியிலே வழங்கப்பட்டது.
இழப்புகளை கொடுத்து வாங்கிக்கொண்டாரே தவிர 12.5 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைந்ததற்காக ஒரு நாளும் ஒரு ஆசனத்தை கூட பெறவில்லை. இப்போது இங்கு வந்துவிட்டு எமக்கு அவர் அரசியலில் பொய் சொல்ல கூடாது.
இதனால் தான் அஷ்ரப் சந்திரிக்காவோடும், வெற்றிலையோடும்,
கதிரையோடும் சேர்ந்து முஸ்லிம்களை களமிறக்கி முஸ்லிம்களை காப்பாற்றினார். ஆனால் இன்று பயங்கரவாதிகள் என்ற பெயரோடு நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment