அரச பொறுப்பு வேண்டாம்:

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர்





இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசருமான ஹாரி, ஹாலிவுட் நடிகையான மேகன் மார்க்கலை கடந்த 2018 ம் ஆண்டு மே 19ம் திகதி திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர், பல்வேறு நாடுகளுக்கு சென்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஏழை மக்களுக்கு உதவி வந்தனர்.

இங்கிலாந்தை பொறுத்தவரை, அரச குடும்பத்தினர், அரசின் அங்கமாக கருதப்படுவார்கள். அரசு எடுக்கும் முடிவுகளில் அவர்களின் பங்கு இருக்கும். இந்நிலையில், அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து, ஹாரி-மேகன் தம்பதி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பல மாத ஆலோசனைக்கு பிறகு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். ஆனால், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் தேவையான எங்களின் உதவிகள் எப்போதும் தொடரும்.

இனி, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளோம். இதனால், குடும்பத்திற்கு அதிக கவனம் செலுத்த முடியும். நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்க இருக்கிறோம். இதுபற்றி விரைவில் முழு விவரத்தை தெரிவிப்போம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இளவரசரின் இந்த முடிவு, அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top