பாகிஸ்தானில் பள்ளிவாசலுக்குள்
குண்டு வெடிப்பு - 15 பேர் பலி
பாகிஸ்தானில்
பள்ளிவாசலுக்குள் நிகழ்ந்த குண்டு
வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி
உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில்
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள
பள்ளிவாசலில் நேற்று
முன்தினம் வெள்ளிக்கிழமை
ஜும்ஆத்
தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து
கொண்டு தொழுது கொண்டிருந்தனர். அப்போது
பள்ளிவாசலுக்குள் பயங்கர
சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில்
அந்த பகுதியே
அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர்
உடல் சிதறி
உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து
தகவல் கிடைத்ததும்
பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து,
பள்ளிவாசலை சுற்றிவளைத்து பாதுகாப்பு வளையத்துக்குள்
கொண்டு வந்தனர்.
பின்னர்
அவர்கள் படுகாயம்
அடைந்த நபர்கள்
அனைவரையும் மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். அவர்களில்
சிலரது நிலைமை
கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும்
உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்
பொறுப்பு ஏற்றுள்ளது.
0 comments:
Post a Comment