அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல் நினைவு மியூசியம்
செப்டம்பர் – 11 இன்று திறப்பு

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவாக அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இன்று வியாழக்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு முதல் முறையாக அனுமதிக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ஆகியோருடன் வியாழக்கிழமை 9-11 நினைவு அருங்காட்சியகத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் செப்டம்பர் 11, 2001 அன்று நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 2,983 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. நியூயார்க்கில், இந்த 9-11 நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படும் செய்தி வெளியானதில் இருந்து பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடப் பணிகள் பெரும் தாமதத்துடன் நடந்து வந்தன. தற்போது அருங்காட்சியகத்திற்கு முதல் முறையாக மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்த அருங்காட்சியகத்தில், 9-11 தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், அங்கு உயிரிழந்தவர்களின் தனிப்பட்ட உடமை பொருட்கள் சில அடங்கும். அநேக பொருட்கள், தாக்குதலில் உருக்குலைந்த, அல்லது சேதமடைந்த நிலையில் உள்ளன. அத்துடன், தாக்குதலில் மரணமடைந்த அனைவரது போட்டோக்களும்இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.  விமானங்களை கடத்தி இந்த டவர்களில் மோதியதில் இரு டவர்களும் அழிந்ததுடன், சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் டவரில் மோதிய யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சில பாகங்களும் மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி இன்று மாலை ஆறு மணியளவில் இந்த 13 ஆவது அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top