பாகிஸ்தான் உளவாளி என
மற்றொருவர் சென்னையில் கைது!
இவர் இலங்கையைச்
சேர்ந்தவராம்!!
பாகிஸ்தான்
உளவாளி எனச் சந்தேகித்து சென்னையில் நேற்று இரவு இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
என அறிவிக்கப்படுகின்றது.
சென்னையில்
கைது செய்யப்பட்ட அந்த உளவாளியின் பெயர் அருண் என்பதாகும். அவரை இன்று 11 ஆம் திகதி
(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
காவலில் எடுத்து விசாரணை நடத்த போவதாக தேசிய புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவரிடம் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், லேப்–டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல்
செய்து உள்ளனர்.
பாகிஸ்தான்
உளவாளிகள் என ஜாகீர் உஸைன்
உட்பட 4 பேர்
ஏற்கனவே கைது
செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க
தூதரகம், பெங்களூரில்
உள்ள இஸ்ரேல்
நாட்டு தூதரகம்
ஆகியவற்றை குண்டு
வைத்து தகர்க்க
சதி திட்டம்
தீட்டியதாக தகவல் வெளியாகியது. ஜாகீர் உஸைன்
இலங்கையை சேர்ந்தவர்.
மேலும் இலங்கையில்
உள்ள பாகிஸ்தான்
தூதரக அதிகாரிகள்
இருவர் மீதும்
குற்றம் சாட்டப்பட்டது.
முதலில்
இந்த வழக்கை
கியூ பிரிவு
பொலிஸார் விசாரித்தனர்.
பின்னர் இந்த
வழக்கு தேசிய
புலனாய்வு பிரிவு
அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில்
தேசிய புலனாய்வு
அமைப்பினர் மேலும் ஒருவரை நேற்று இரவு
கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment