அஷ்ரஃபின் அரசியலை அறிய அமைச்சர் பஷீருக்கு

14 வருடங்கள் எடுத்திருக்கிறது.


சட்டத்தரணி முஸ்தஃபா அபுல் கலாம்







அமைச்சர் பஷீரின் காலம் கடந்து உதிப்பு வந்த உரையும், அந்த உதிப்பு தொடர்பான எனது கருத்துக்களும் கீழ் தரப்பட்டுள்ளன. நண்பர்களும் கருத்து பரிமாறலாம்……..
                                                             #######################
பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடாது. என தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மாநாடு (23/08/2014) கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்றது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறியதாவது;.
முஸ்லிம்களின் மத அடையாளங்களை மாற்றுவதற்கு இலங்கையில் சில குழுக்கள் இன்று தூக்கியுள்ள போர்க்கொடி பெளத்த தர்மத்துக்கு ஒவ்வாதது. வரலாற்றுக் காலம் தொட்டு முஸ்லிம்களின் நாளங்களில் இழையோடியுள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் தலைமைகளின் அரசியல் நகர்வுகள் அமைவதே இன்றைய அவசர .தேவை.
உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளினாலன்றி யதார்த்தபூர்வ செயற்பாடுகள் சிந்தனை சக்தியுள்ள தலைமையே இன்று முஸ்லிம்களுக்கு தேவைப்படுகிறது.முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் இதையே செய்தார். நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக இறுதியாக நகர்த்தப்பட்ட அரசியல் காய்நகர்த்தலே அது.
இதற்காகத்தான் மறைந்த தலைவர் மூவினங்களையும் ஒன்றுபடுத்தும் அரசியல் கட்சி பற்றி தனது அந்திம காலத்தில் சிந்தித்தார். சிறுபான்மை சமுகங்கள் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியை இழக்க வேண்டி ஏற்பட்டால் மூன்று சமூகங்களையும் சம அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியூடாக பேரம் பேசும் சக்தியை பெறுவதே அஷ்ரஃபின் நோக்கமாக இருந்ததுஎன்று அமைச்சர் பஷீர் குறிப்பிட்டார்.

                                                                         #############

இலங்கை முஸ்லிம்களுக்கான இந்த புதிய அரசியல் பாதை பற்றி 1998 ல் தலைவர் அஷ்ரஃப் . அறிவித்தார். படிப்படியாக செயல் படுத்தினார். அப்போது பஷீர் எங்கிருந்தார்?
சிங்கள பேரினவாதம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை அஷ்ரஃப் எதிர்வு கூறினார். அதற்கு மாற்றீடாகவே அவர் NUA வை முன் வைத்தார். 2000 பொது தேர்தலில் மரம் சின்னத்தை நூஆ(NUA) வுக்கு மாற்றி NUA வை முதல் முறையாக களமிறக்கினார்.
அவரின் தூர திருஷ்டியான அரசியல் பாதையில் பயணிக்காமல் 2000 பொது தேர்தலின் பின்பு உங்களதும் கம்பனியின் சுய நலனுக்காகவும் SLMC மீண்டும் முற்படுத்தி மரம் சின்னம் NUA இலிருந்து SLMC க்கு பலவந்தமாக மாற்றப்பட்டது.
மு. கா போராளிகளை உணர்ச்சியூட்டி உசுப்பேற்றி கடந்த தசாப்தத்தில் சிங்கள பேரினவாதத்துக்கு தீனி போட்டதில் நீங்கள் முக்கிய பாத்திரம் வகித்திருக்குறீர்கள். உங்களின் தனிப்பட்ட அரசியல் இலக்கை அடைவதற்கு SLMC தேவைப்பட்டது.

NUA வை கிடப்பில் போடவேண்டிய அரசியல் காய் நகர்த்தல் நீங்கள் NUA தேசியப் பட்டியல் எம்.பி ஆகிய பிறகு முன்னெடுக்கப்பட்டது. பின்பு நீங்கள் SLMC தேசியப்பட்டியல் MP ஆகி, பிரதி அமைச்சராகி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகும் வரை SLMC இன் போராளிகளை உசுப்பேற்றி அதில் குளிர் காய்ந்ததை அவர்கள் மறக்கவில்லை.
ஒலுவில் பிரகடனம், கரையோர மாவட்டம் போன்ற உங்கள் கம்பனியின் தேர்தல் சர வெடிகளும் வெற்று கோசங்களும் பெரும்பான்மையை உசுப்பியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
14 வருடங்கள் கடந்த பிறகு இப்போது தான் திடீர் என்று அஷ்ரஃபின் தூர திருஷ்டியான அரசியல் பாதை உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. இதுவும் உங்களின்அரசியல் காய் நகர்த்தலா?அல்லது பழம் நகர்த்தலா? இதையும் தெளிவு படுத்துங்கள் சகோ. பஷீர். உள் நோக்கம் இல்லாமல் உங்களுக்கு இந்த யோசனை வந்திருக்காது..

SLMC முன்னாள் தேசிய அமைப்பாளர்


NUA நூஆ பிரதித் தலைவர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top