அமெரிக்க போர் விமானங்கள்
மூலம்
ஈராக்கில்
துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன
ஈராக்கில்
போராளிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட உள்ளதால், மொசூலை சுற்றியுள்ள மக்கள்
வெளியேறுமாறு எச்சரிக்கும் துண்டு பிரசுரங்கள் அமெரிக்க
போர் விமானங்கள்
மூலம் வீசப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
சன்னி இஸ்லாம்
பிரிவைச் சேர்ந்த
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள், ஷியா
இஸ்லாமிய அரசுக்கு
எதிராக குறிவைத்து
தாக்குதல் நடத்தி
வருகின்றனர். கடந்த ஜூன் 10 ஆம் திகதி
ஈராக் அரசை
அச்சுறுத்தும் வகையில் தலைநகர் பாக்தாதை சுற்றிய
முக்கிய நகரங்கள்,
மொசூல் அணை
ஆகியவற்றை போராளிகள்
கைப்பற்றினர்.
இதனை
அடுத்து இஸ்லாமிய
நாடு அமைக்க
முயற்சிக்கும் போராளிகளுக்கு எதிராக ஈராக் இராணுவத்திற்கும்
குர்திஷ் படையினருக்கும்
ஆதரவு அளித்து
போராளிகளுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கப் படைகள்
நடத்தி வருகின்றன.
இதனால்,
அந்த பகுதியில்
இருக்கும் பொது
மக்கள் அனைவரும்
நகரை விட்டு
வெளியேறும்படி ஈராக் பாதுகாப்புத்துறை அமைச்சர் கையெழுத்திட்ட
துண்டுப் பிரசுரங்கள்,
அமெரிக்கப் போர் விமானங்களால் நகரம் எங்கும்
நேற்று இரவு
வீசப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை முற்றிலுமாக
ஒடுக்க அமெரிக்கா
தீவிர ஆலோசனை
மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மொசூல்
நகரை சுற்றிய
பகுதியில் போராளிகள்
பதுங்கியிருக்கும் இடங்களில் வான்வழித்
தாக்குதல் நடத்த
திட்டமிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 comments:
Post a Comment