மேஜர் ஜெனரல்
ஜானக பெரேரா கொலை வழக்கு
விடுதலைப் புலி உறுப்பினருக்கு
20 ஆண்டு கால கடூழிய சிறை
2008ஆம்
ஆண்டு இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரி ஜானக பெரேராவை தற்கொலைத்
தாக்குதல் மூலம் கொலை செய்த வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு
20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த
வழக்கில் இரண்டாம் பிரதிவாதிக்கு
20 ஆண்டு கால
கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம்
உயர் நீதிமன்றம்
விதித்துள்ளது.
சண்முகநாதன்
சுதாகரன் என்ற
தமிழீழ விடுதலைப்
புலி உறுப்பினருக்கு
இவ்வாறு தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம்
ஆண்டு இடம்பெற்ற
இத்தாக்குதல் சம்பவத்தில் ஜானக பெரேரா, அவரது
மனைவி உள்ளிட்ட
29 பேர் இந்த
தற்கொலைக் குண்டுத்
தாக்குதலில் உயிரிழந்தனர்.
.
0 comments:
Post a Comment