சென்னையில் கைது செய்யப்பட்ட
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி
அருண் செல்வராஜன் 25 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில்
பாகிஸ்தான்
ஐ.எஸ்.ஐ. உளவாளி
அருண் செல்வராஜன்,
பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 25
ஆம் திகதி வரை
நீதிமன்ற காவலில்
அடைக்க நீதிபதி
உத்தரவிட்டார்.
பாகிஸ்தான்
ஐ.எஸ்.ஐ. உளவாளியான
அருண் செல்வராஜன்(வயது 28) என்பவரை
இந்திய தேசிய புலனாய்வு பொலிஸார் நேற்று முன்தினம்
சென்னையில் கைது செய்தனர். அவர் மீது
அரசு ரகசியங்களை
வெளியிடுதல், கஞ்சா வைத்திருத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்
கீழ் இந்திய
தேசிய புலனாய்வு பொலிஸார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து
அருண் செல்வராஜனை
நேற்று மாலை
பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி
மோனி முன்னிலையில்
பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள்.
வழக்கை விசாரித்த
நீதிபதி, அருண்
செல்வராஜனை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில்
அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்திய தேசிய புலனாய்வு பொலிஸார் அருண்
செல்வராஜனை புழல் சிறைக்கு அழைத்து
சென்றனர்.
கைதான
அருண் செல்வராஜன்,
தன் மீது
யாருக்கும் சந்தேகம் வராதபடி விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்
இந்திய ரூபாவில் மாதம் ரூ.7 ஆயிரம்
வாடகைக்கு குடியிருந்து
வந்து உள்ளார்.
இவரை பார்ப்பதற்கு
அடிக்கடி வாலிபர்கள்
4 பேர் கொண்ட
குழுவாக வந்து
சென்றனர்.
இவர்,
அக்கம் பக்கத்தில்
இருப்பவர்களிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம்
தேசிய புலனாய்வு
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜனை
அவர் தங்கி
இருந்த வீட்டுக்கு
அழைத்துச் சென்று
பொலிஸார் சோதனை
செய்தபோதுதான் அவர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி
என்ற விவரம்
தெரிந்து அடுக்குமாடி
குடியிருப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள்
அதிர்ச்சி அடைந்தனர்
எனக் கூறப்படுகின்றது.
அருண்
செல்ராஜனுக்கு மிகவும் நெருக்கமானவர்களே இந்த வீட்டை
அவருக்கு வாடகைக்கு
எடுத்து கொடுத்து
உள்ளனர் என்று
தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment