கல்முனை மாநகர சபை 

கலைக்கப்படவேண்டும்


Riyas Sulaima Lebbe


தலைவர் அஷ்ரப் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன்.
முதலாவது கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு புதிய ஒரு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்
இரண்டாவது கல்முனை மாநகர அபிவிருத்தியை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்க வேண்டும் என்பதே அதுவாகும்.
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் கல்முனைக்குடி பிரதேசம் சாஹிறா கல்லூரி வீதியில் ஆரம்பித்து கடற்கரைப்பள்ளி வீதியுடன் முடிவடைகிறது. அதில் குறிப்பிட்ட இரண்டு வீதிகள் தவிர்ந்த ஏனைய பதின் மூன்று வீதிகளும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாமல் உள்ளது. ஆரம்பிக்கப்பட்ட இரண்டு உள் வீதிகள் கூட வருடக்கணக்காக முடிக்கப்படாமல் உள்ளது. வீதிகள் உயர உயர வீடுகள் பணிந்து லொண்டு செல்கின்றன.மலை காலம் வந்தால் வீடுகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன.
கல்முனை மாநகர சபைக்கு அதிகம் வருமானத்தை ஈட்டித்தரும் கல்முனை பொதுச்சந்தைக்கு ஒரு மல சல கூடத்தைக்கூட கட்டிக்கொடுக்க முடியாத மாநகரசபை சில உருப்பினர்களை கொந்தராத்துக்காரர்களாக மாத்தியதை தவிர எதையும் சாதிக்க வில்லை.
தற்போது மழை காலம் ஆரம்பிக்க உள்ளபடியால் மைதானத்துக்கு மண் போடுதல், பாதைக்கு மன்போடுதல் என பணிகள் ஆரம்பிக்க உள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னே புதிய நகரம் பற்றி கனவு மட்டுமல்ல அதை சாதிக்கவும் துடித்த ஒரு தலைவன் வாழ்ந்த ஊரில் வீதி கூட போடப்படவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் கூட இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. இன்னும் உண்மையாக பாதிக்க பட்ட மக்கள் வீடின்றி இருக்கும் நிலை காணப்படுகின்றது,
கரைவாகு வட்டைக்குள் இன்னும் சுமார் பதின்மூன்று ஏக்கர் நிலம் நிரப்ப முடியாமல் உள்ளது.
அதே நேரம் ஏனைய சாய்ந்தமருது, மருதமுனை, மற்றும் நற்பிட்டிமுனை உட்பட சகல இடங்களிலும் பொதுவசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும் அந்த ஊர்களில் உள்ள புத்திஜீவிகள் அரசியல் வாதிகளில் தங்களது ஊரை தங்க விடாமல் தவிர்த்ததன் மூலம் வீதிகளையவது திருத்தி உள்ளனர்.
நமது கல்விக்கண் திறந்த கல்முனை சஹிரா கல்லூரி இன்று வகுப்பறைகள் இன்றியும் கட்டி முடிக்கப்படாத அரை குறை கட்டடத்துடனும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதே நிலையில் உள்ள கட்டடங்கள் இன்று வரை முடிக்கப்படவில்லை. எதாவது செய்திகள் பத்திரிகைகளில் வரும் போது உடனே அங்கு வரும் அரசியல்வாதிகள் பாழடைந்த கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்து ஒரு புகைப்படம் எடுத்து பத்திரிகைக்கு அனுப்புவதோடு அபிவிருத்தி முடிந்து விடுகின்றது.
கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் அரசு ஆட்சியில் இருக்கும் போது ஒரு போட்டோ பிரதி இயந்திரத்தை பெறுவதற்காக மாணவர்களை பிற்பகல் ஐந்து மணிவரை காக்க வைக்கும் அதிபர்களும் பாவம்.

இன்று நூற்றுக்கணக்கில் அமைச்சர்களை கொண்ட நமது நாட்டின் அமைச்சரவையில் இருந்து ஒரு முழு மந்திரியோ அரை மந்திரியோ இதுவரை நமது பிரதேசத்தை திரும்பிப்பார்க்காமல் உள்ளது ஏன் என்றும் ஜனாதிபதியை நாம் கேட்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top