ஐ போன் 6, ஐ போன் 6 ப்ளஸ்
அறியவேண்டிய
அறிமுகத் தகவல்கள்
ஐ
போன் விரும்பிகளின் பல நாள்
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய
ஐ போன் மாடல்களை
ஆப்பிள் நிறுவனம்
தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த
போன்களை எதிர் வரும் (செப்டம்பர்) 19-ஆம் திகதி வெள்ளிக்கிழமை
தொடக்கம்
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட
6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த
மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும்
எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை வங்குவதற்கு
விரும்புபவர்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் முன்பதிவு
செய்து கொள்ளலாம்
என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐ
போன் 6 மற்றும் ஐ போன் 6 ப்ளஸ்
எனப் பெயரிடப்பட்டிருக்கும்
இவை, முந்தைய
ஐ போன்கள் திரையைவிட
பெரிய திரையைக்
கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக
உள்ளது.
இந்தப்
புதிய மாடல்கள்,
சாம்சங் நிறுவன
மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக ஐதொழில்நுட்ப
ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான
ஆப்பிள் வாட்ச்,
புதிய ஐ போன்களோடு
அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
காலிபோர்னியா,
பிளிண்ட் சென்டரில்,
30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம்
செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட்
போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
16 ஜிபி
அளவுள்ள ஐ
போன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி
அளவுள்ள ஐ
போன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐ போன் 6 ப்ளஸின் விலை
299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி
ஐ போன் ப்ளஸ்
விலை 499 டாலர்கள்
என்றும் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
தற்போது,
ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத
விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து
ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள்
6.9 சதவீத விற்பனையும்
செய்து வருகின்றன.
0 comments:
Post a Comment