எகிப்தில் 70 ஜடைகளுடன் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படும்

பெண் உடல் கண்டெடுப்பு!

எகிப்தில், 70 ஜடைகளுடன் கூடிய சிகையலங்காரத்துடன் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படும் பெண் ஒருவரின்  உடலை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்நாட்டின் புராதன நகரமான அமரானாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்வில், அந்தப் பெண்ணின் உடல் கிடைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் உடல், "மம்மி'யாகப் பாதுகாக்கப்படவில்லை எனவும், ஒரு சாதாரண தரைவிரிப்பில் சுற்றப்பட்டிருந்த நிலையில் அது கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஜொலந்தா பாஸ் கூறுகையில், ""அந்தப் பெண்ணின் தலைமுடி மிகவும் சிக்கலான முறையில், சுமார் 70 ஜடைகளாகப் பின்னப்பட்டுள்ளது. பெண்ணின் வயது மற்றும் பிற விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இப்பகுதியிலிருந்து, சிகையலங்காரம் அழியாத நிலையில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கில தொல்லியல் ஆய்வு இதழான "ஜர்னல் ஆஃப் எகிப்தியன் ஆர்க்கியாலஜி'யில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top