சம்மாந்துறை பகுதிகளை இலகுவாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு
பெயர் மாற்றம் அவசியம்
(ஏ.கே.எம் சப்று மிந்தார்)
சம்மாந்துறை
நகரமானது பாரிய
நிலப் பரப்பை
தன்னகத்தே கொண்ட
ஓர் அழகிய
ஊராகும்.சம்மாந்துறையின்
நில விஸ்தீரணத்தினால்,அதன் பகுதிகளை
இலகுவாக அடையாளப்
படுத்திக் கொள்ள
குறித்த சில
நிலப் பரப்புக்கள்
குறித்த பெயர்
கொண்டு அழைக்கப்படும்.மேலும் பல
கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
எனினும்,அதன் பெயர்
களோ அடுத்த
தலை முறையினரால்
ஏற்றுக்கொள்ளப் படும் வண்ணம் உள்ளதா? என்ற
வினாவை எழுப்பி
விடை பெற
எத்தனித்தால் இல்லை என்று தான் கூற
வேண்டும்.
காத்தான்குடியின்
வீதிகளின் பொயர்களை
பாருங்கள் கர்பலாவீதி
,சைத்குதுப்வீதி.அதன் சொல் வடிவமோ கருவோ
தனி .கலிபாக்கலினதும்,இஸ்லாமிய அறிஞ்சர்களினதும்
இஸ்லாமிய வரலாறுகளையும்
தொட்டுச் செல்லும்
வண்ணம் அமைக்கப்
பட்டுள்ளது.
ஆனால்.நமது கிராமங்களின்
பெயர்கள் என்ன
தெரியுமா..?? மலையடிகிராமம் ,உடங்கா ,கல்லரிச்சல் ,தென்னம்பிள்ளை
கிராமம் . வீதியின்
பெயர்களோ!!!!!!
இதன்
கருப்பொருளில் என்ன உள்ளது..??
இதனை
பகிரங்கமாக எம்மை அடையாளப்படுத்த கூற முடியுமான
பெயராக உள்ளதா??
நண்பர்களே!
நான்
இதனை எழுதுவதானால்
உங்கள் உள்ளங்களை
பாதித்தால் மன்னிக்கவும். இப் பெயர்களுடன் சம்மாந்துறையில்
உள்ள கிராமங்கள்,பகுதிகள் அழைக்கப்படுவது
சம்மாந்துறைக்கு அழகல்ல.இதன் பெயர் மாற்றங்கள்
சிறந்த அரசியல்
தலைமைகளால் தான் மேற்கொள்ள முடியும்.சிறந்த
அரசியல் தலைமைகளை
உருவாக்க வோண்டும்.நமது நகரம்
மறு மலர்ச்சியடைய
நண்பர்கள் அனைவரதும்
ஒத்துழைப்பு வேண்டும்.இதை நாம் அடைய
கல்வி எனும்
ஆயுதமே சிறந்த
வழி அதனை
வழங்க உறுதி
பூணுவோம். நல்லதைச் சிந்திப்போம்! நல்லதைச் செய்வோம்!! இதுவே
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment