எகிப்தில் 9 போராளிகள் சுட்டுக்கொலை
11 பேர் இராணுவத்தினரால்
கைது
எகிப்து சினாய் மாகாணத்தில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும்
இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சண்டையில் 9 போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும்
11 போராளிகளை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில்
அதிபர் முகம்மது
முர்ஸியின் ஆட்சி கடந்த ஆண்டு முடிவுக்கு
வந்ததை தொடர்ந்து,
அங்கு இராணுவ
வீரர்கள் மற்றும்
பொலிஸாருக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து
வருகின்றன. போராளிகளின் வெடிகுண்டு தாக்குதல் மற்றும்
துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஏராளமான பாதுகாப்பு படையினர்
உயிரிழந்துள்ளனர். இதனால் போராளிகளுக்கு
எதிராக இராணுவம்
கடும் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள வடக்கு சினாய்
மாகாணம் போராளிகளின்
ஆதிக்கம் நிறைந்த
பகுதியாகும். எனவே இந்த பகுதியில் இராணுவம்
அடிக்கடி பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி
சினாய் மாகாணத்தின்
பல்வேறு பகுதிகளில்
இராணுவம் அதிரடி
சோதனை மேற்கொண்டது.
அப்போது அங்கே
பதுங்கியிருந்த போராளிகள், இராணுவத்தினர் மீது கையெறி
குண்டுகளை வீசி
தாக்கினர். இதில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை
நடந்தது. இந்த
தாக்குதலில் 9 போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் 11 போராளிகளை
இராணுவத்தினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின்
போது, போராளிகள்
பதுங்கியிருந்த 10 வீடுகள் மற்றும்
20 மறைவிடங்களை பாதுகாப்பு படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment